• Oct 02 2024

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் நடத்த வேண்டும்- அக்மீமன தயாரத்ன தேரர் கோரிக்கை..!

Sharmi / Oct 2nd 2024, 11:33 am
image

Advertisement

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் நடத்த வேண்டும் என இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர்  தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் நேற்றையதினம்(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டிற்கு ஜனாதிபதி ஒருவர் கிடைத்துள்ளார்.

இந்த ஜனாதிபதி எந்த வித பிரச்சனையும் இன்றி சாதாரண முறையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையை பல பிரச்சினைகள் மத்தியில் மாணவர்கள் முகம் கொடுத்தனர்.

ஆனால் ஒரு கிழமையின் பின்னர் பரீட்சை வினாத்தாளில் உள்ள வினாக்கள் வெளியாகி உள்ளன என்று அதாவது பரீட்சை திணைக்களத்தின் மூலம் வெளியாகி உள்ளது என்றார்கள், பின்னர் 3 கேள்விகள் வெளியாகி உள்ளன.

பின்னர் 8 கேள்வி வெளியாகியுள்ளது என்று கூறினார்கள்.

இது குறித்து பிழை செய்தவர்களை கைது செய்துள்ளனர். உண்மையில் இவ் விடயம் குறித்து சிந்திக்க வேண்டும். மாணவர்களிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இதனால் பெற்றோர் வீதியில் இறங்கி போராட்டம் செய்கின்றனர்.

நாங்கள் சென்று பார்த்தோம் அங்கு அவர்கள் கண்ணீர் மல்க போராட்டம் செய்தனர்

இரவு முழுவதும் அவர்கள் அங்கு அவர்களின் பிள்ளைகளிற்காக போராட்டம் செய்தனர்.

எனவே நாங்கள் கூறுவது 3 கேள்விகளிற்கு புள்ளி வழங்கி சரி வராது கல்வி அமைச்சு கூறுவது 3 கேள்விகள் வெளியாகியுள்ளது என்று ஆனால் பல கேள்விகள் வெளியாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் எங்களிற்கு முதலில் தெரிய வந்தது முழு வினாத்தாளுமே வெளியாகி உள்ளது

எனவே பெற்றோரும், மாணவர்களும் சரி பரவாயில்லை மேலும் ஒரு பரீட்சையிறகு முகம் கொடுக்க தயாராக உள்ளார்கள்.

எனவே மீண்டும் இப் பரீட்சை வைக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை

இது விளையாட்டு விடயம் இல்லை மாணவர்களின் எதிர்காலமே

பெற்றோரின் கண்ணீருக்கு  சரியான பதில் வழங்க வேண்டும்.

மீண்டும் இலகுவான முறையில் பரீட்சை வினாத்தாளை ஒழுங்கு படுத்தி பரீட்சையை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறேன்

இப் பரீட்சையை நடத்த மீண்டும் ஒரு செலவு ஏற்படும்தான்.  ஆனால் இதற்கு வேறு வழி இல்லை. வினாக்களை வெளியிட்டவர்கள் இரண்டொரு நாட்களில் வெளியே வந்துவிடுவார்கள் எனவே மீண்டும் பரீட்சை நடத்துவதே இதற்கு சரியான தீர்வு எனவும் தெரிவித்தார்.


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் நடத்த வேண்டும்- அக்மீமன தயாரத்ன தேரர் கோரிக்கை. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் நடத்த வேண்டும் என இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர்  தெரிவித்துள்ளார்.தெஹிவளையில் நேற்றையதினம்(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.நாட்டிற்கு ஜனாதிபதி ஒருவர் கிடைத்துள்ளார்.இந்த ஜனாதிபதி எந்த வித பிரச்சனையும் இன்றி சாதாரண முறையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையை பல பிரச்சினைகள் மத்தியில் மாணவர்கள் முகம் கொடுத்தனர்.ஆனால் ஒரு கிழமையின் பின்னர் பரீட்சை வினாத்தாளில் உள்ள வினாக்கள் வெளியாகி உள்ளன என்று அதாவது பரீட்சை திணைக்களத்தின் மூலம் வெளியாகி உள்ளது என்றார்கள், பின்னர் 3 கேள்விகள் வெளியாகி உள்ளன.பின்னர் 8 கேள்வி வெளியாகியுள்ளது என்று கூறினார்கள்.இது குறித்து பிழை செய்தவர்களை கைது செய்துள்ளனர். உண்மையில் இவ் விடயம் குறித்து சிந்திக்க வேண்டும். மாணவர்களிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதுஇதனால் பெற்றோர் வீதியில் இறங்கி போராட்டம் செய்கின்றனர்.நாங்கள் சென்று பார்த்தோம் அங்கு அவர்கள் கண்ணீர் மல்க போராட்டம் செய்தனர்இரவு முழுவதும் அவர்கள் அங்கு அவர்களின் பிள்ளைகளிற்காக போராட்டம் செய்தனர்.எனவே நாங்கள் கூறுவது 3 கேள்விகளிற்கு புள்ளி வழங்கி சரி வராது கல்வி அமைச்சு கூறுவது 3 கேள்விகள் வெளியாகியுள்ளது என்று ஆனால் பல கேள்விகள் வெளியாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் எங்களிற்கு முதலில் தெரிய வந்தது முழு வினாத்தாளுமே வெளியாகி உள்ளதுஎனவே பெற்றோரும், மாணவர்களும் சரி பரவாயில்லை மேலும் ஒரு பரீட்சையிறகு முகம் கொடுக்க தயாராக உள்ளார்கள்.எனவே மீண்டும் இப் பரீட்சை வைக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கைஇது விளையாட்டு விடயம் இல்லை மாணவர்களின் எதிர்காலமேபெற்றோரின் கண்ணீருக்கு  சரியான பதில் வழங்க வேண்டும்.மீண்டும் இலகுவான முறையில் பரீட்சை வினாத்தாளை ஒழுங்கு படுத்தி பரீட்சையை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறேன்இப் பரீட்சையை நடத்த மீண்டும் ஒரு செலவு ஏற்படும்தான்.  ஆனால் இதற்கு வேறு வழி இல்லை. வினாக்களை வெளியிட்டவர்கள் இரண்டொரு நாட்களில் வெளியே வந்துவிடுவார்கள் எனவே மீண்டும் பரீட்சை நடத்துவதே இதற்கு சரியான தீர்வு எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement