• Jun 26 2024

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு...! ஏட்டிக்குப் போட்டியாக இடம்பெறும் கட்சி தாவல்கள்...!

Sharmi / Jun 17th 2024, 4:48 pm
image

Advertisement

தெற்கு அரசியலில் வெகுவிரைவில் ஏட்டிக்குப் போட்டியாகக் கட்சி தாவல்கள் சூடுபிடிக்கும் என்று சிங்கள வார இதழ்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.

இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்றும், கட்சி தாவும் காலப் பகுதி பற்றி ஆராயப்பட்டு வருகின்றது என்றும் தெரியவருகின்றது.

இதன்படி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே தாவல்கள் பெருமளவில் இடம்பெறக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற  உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசுடன் இணையவுள்ளனர்.

அதேபோல் ஆளுங்கட்சி பக்கம் உள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

அத்துடன், சர்வஜன அதிகாரம் பக்கமும் சில எம்.பிக்கள் செல்லவுள்ளனர். மேலும் சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

எனவே, கட்சி தாவல்கள் களைகட்டும் என்றும், சுமார் 40 வரையான எம்.பிக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை மாற்றத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு. ஏட்டிக்குப் போட்டியாக இடம்பெறும் கட்சி தாவல்கள். தெற்கு அரசியலில் வெகுவிரைவில் ஏட்டிக்குப் போட்டியாகக் கட்சி தாவல்கள் சூடுபிடிக்கும் என்று சிங்கள வார இதழ்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்றும், கட்சி தாவும் காலப் பகுதி பற்றி ஆராயப்பட்டு வருகின்றது என்றும் தெரியவருகின்றது.இதன்படி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே தாவல்கள் பெருமளவில் இடம்பெறக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற  உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசுடன் இணையவுள்ளனர்.அதேபோல் ஆளுங்கட்சி பக்கம் உள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.அத்துடன், சர்வஜன அதிகாரம் பக்கமும் சில எம்.பிக்கள் செல்லவுள்ளனர். மேலும் சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.எனவே, கட்சி தாவல்கள் களைகட்டும் என்றும், சுமார் 40 வரையான எம்.பிக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை மாற்றத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement