முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, தமிழினம் அனுபவித்த இன்னல்களை இளையோர் மத்தியில் கடத்தும் நோக்குடன் சொலிடாரிடியின் புரட்சிகர இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் கண்காட்சி ஒன்று கடந்த மே மாதம் 11,12 ஆம் திகதிகளில் பிரித்தானியாவில் இடம்பெற்றது.
குறித்த கண்காட்சியில், புகைப்பட பத்திரிக்கையாளர் அமரதாஸின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன, இது முள்ளிவாய்க்காலின் பயங்கரத்தின் தனித்துவமான காட்சிகளை கண்முன்கொண்டுவந்தது, மேலும் உலகளாவிய எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விரிவான கதையுடன் ஒரு புதிய ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
வரலாறு எவ்வாறு கடினமானது என்பதை விமர்சிக்கும் கலைப்படைப்பு மற்றும் வெகுஜன படுகொலை வரலாறுகளை மௌனமாக்கும் பாசாங்குத்தனம், எதிர்ப்பு இயக்கங்களை முன்னிலைப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது. “நோ ஃபயர் சோன்” என்ற ஆவணப்படமும் கண்காட்சியின் போது பார்வைக்கு வைக்கப்பட்டது.
மேலும் போரின் இறுதிக் கட்டத்தின் பயங்கரத்தை சித்தரிக்கும் “நோ ஃபையர் சோன்” புகைப்பட பகுதியில் இறுதி வாரத்தில் எவ்வாறு மக்கள் மீதான தாக்குதல்கள் கொடூரமாக்கப்படடன என்பது காட்சிப்படுத்தப்பட்டன.
தமிழினம் அனுபவித்த இன்னல்களை இளையோர் மத்தியில் கடத்தும் நோக்குடன் கண்காட்சி. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, தமிழினம் அனுபவித்த இன்னல்களை இளையோர் மத்தியில் கடத்தும் நோக்குடன் சொலிடாரிடியின் புரட்சிகர இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் கண்காட்சி ஒன்று கடந்த மே மாதம் 11,12 ஆம் திகதிகளில் பிரித்தானியாவில் இடம்பெற்றது. குறித்த கண்காட்சியில், புகைப்பட பத்திரிக்கையாளர் அமரதாஸின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன, இது முள்ளிவாய்க்காலின் பயங்கரத்தின் தனித்துவமான காட்சிகளை கண்முன்கொண்டுவந்தது, மேலும் உலகளாவிய எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விரிவான கதையுடன் ஒரு புதிய ஆவணப்படமும் திரையிடப்பட்டது. வரலாறு எவ்வாறு கடினமானது என்பதை விமர்சிக்கும் கலைப்படைப்பு மற்றும் வெகுஜன படுகொலை வரலாறுகளை மௌனமாக்கும் பாசாங்குத்தனம், எதிர்ப்பு இயக்கங்களை முன்னிலைப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது. “நோ ஃபயர் சோன்” என்ற ஆவணப்படமும் கண்காட்சியின் போது பார்வைக்கு வைக்கப்பட்டது.மேலும் போரின் இறுதிக் கட்டத்தின் பயங்கரத்தை சித்தரிக்கும் “நோ ஃபையர் சோன்” புகைப்பட பகுதியில் இறுதி வாரத்தில் எவ்வாறு மக்கள் மீதான தாக்குதல்கள் கொடூரமாக்கப்படடன என்பது காட்சிப்படுத்தப்பட்டன.