• May 03 2024

இந்திய அணிக்கு திரும்பியுள்ள முன்னாள் கேப்டன் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

crownson / Dec 4th 2022, 7:19 am
image

Advertisement

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.

இதில், முதல் ஒருநாள் போட்டி, டாக்காவில் உள்ள ஷெரீ பங்களா தேசிய மைதானத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

இதற்காக, டாக்கா சென்ற இந்திய வீரர்கள் தீவிர வலைப்யிற்சியில் ஈடுபட்டனர்.

நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளனர்.

எனவே, இந்திய அணி முழு பலத்துடன் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

அதேவேளையில், சொந்த மண்ணில் சவால் அளிக்கும் நோக்கில் வங்கதேச அணி ஆயத்தமாகியுள்ளது.

இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது குறிப்பிடதக்கது.கடந்த வங்காளதேச உடனான போட்டி தொடரில் தோனி பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஒருநாள் தொடருக்கான வெற்றிக் கோப்பையை, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

இதற்கிடையில், இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முகமது ஷமி, தோள்பட்டை காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

மேலும், டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இவருக்கு மாற்று வீரராக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியை சோனி நிறுவனம் ஒளிபரப்பு செய்வதால் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக பார்க்கலாம். ஆன்லைனில் sony.liv-ல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய அணிக்கு திரும்பியுள்ள முன்னாள் கேப்டன் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில், முதல் ஒருநாள் போட்டி, டாக்காவில் உள்ள ஷெரீ பங்களா தேசிய மைதானத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக, டாக்கா சென்ற இந்திய வீரர்கள் தீவிர வலைப்யிற்சியில் ஈடுபட்டனர்.நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளனர்.எனவே, இந்திய அணி முழு பலத்துடன் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. அதேவேளையில், சொந்த மண்ணில் சவால் அளிக்கும் நோக்கில் வங்கதேச அணி ஆயத்தமாகியுள்ளது.இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது குறிப்பிடதக்கது.கடந்த வங்காளதேச உடனான போட்டி தொடரில் தோனி பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, ஒருநாள் தொடருக்கான வெற்றிக் கோப்பையை, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இதற்கிடையில், இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முகமது ஷமி, தோள்பட்டை காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும், டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இவருக்கு மாற்று வீரராக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த போட்டியை சோனி நிறுவனம் ஒளிபரப்பு செய்வதால் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக பார்க்கலாம். ஆன்லைனில் sony.liv-ல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement