• Jul 27 2024

நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்! samugammedia

Tamil nila / Jul 30th 2023, 7:33 am
image

Advertisement

தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, கடந்த சீசனில் செம்பியனான ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

24 போட்டிகள் கொண்ட நான்கவாது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஜப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், தம்புள்ள ஓரா, கோல் டைட்டன்ஸ், பீ லவ் கண்டி ஆகிய 5 அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.

12 ஆரம்ப சுற்று போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்திலும், மேலும் 8 ஆரம்ப சுற்று போட்டிகள் கண்டி பல்லேகலை மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

இறுதி சுற்றின் மூன்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வருட செம்பியனுக்கான வெற்றிக்கிண்ணம் நேற்று முன்தினம் (28)கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இவ்வருட செம்பியனுக்கு வழங்கப்படும் எல்.பி.எல் கிண்ணம் மீள்சுழற்சி செய்யப்பட்ட அலுமினிய கேன்களினால் தயாரிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

அது, கடற்கரையில் சேகரிக்கப்பட்ட 2,523 அலுமினிய கேன்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மறுசுழற்சி முறையில் கிரிக்கெட் கிண்ணம் உருவாக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

எல்.பி.எல் போட்டியின் பிரமாண்ட ஆரம்ப விழா இன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் samugammedia தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, கடந்த சீசனில் செம்பியனான ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.24 போட்டிகள் கொண்ட நான்கவாது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.ஜப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், தம்புள்ள ஓரா, கோல் டைட்டன்ஸ், பீ லவ் கண்டி ஆகிய 5 அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.12 ஆரம்ப சுற்று போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்திலும், மேலும் 8 ஆரம்ப சுற்று போட்டிகள் கண்டி பல்லேகலை மைதானத்திலும் நடைபெறவுள்ளன.இறுதி சுற்றின் மூன்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.இவ்வருட செம்பியனுக்கான வெற்றிக்கிண்ணம் நேற்று முன்தினம் (28)கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இவ்வருட செம்பியனுக்கு வழங்கப்படும் எல்.பி.எல் கிண்ணம் மீள்சுழற்சி செய்யப்பட்ட அலுமினிய கேன்களினால் தயாரிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.அது, கடற்கரையில் சேகரிக்கப்பட்ட 2,523 அலுமினிய கேன்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.மறுசுழற்சி முறையில் கிரிக்கெட் கிண்ணம் உருவாக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.எல்.பி.எல் போட்டியின் பிரமாண்ட ஆரம்ப விழா இன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement