• Aug 28 2025

கைதுசெய்யப்பட்ட குற்றக்கும்பல் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு; சிறப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணை! - பாதுகாப்பு அமைச்சர் அதிரடி

Chithra / Aug 28th 2025, 12:23 pm
image

செயலற்று காணப்பட்ட புலனாய்வு பிரிவுகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதன் காரணமாகவே குற்றக்கும்பல் உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட குழுவில் கெஹல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் பெக்கோ சமனின் மனைவி மற்றும் மூன்று வயது குழந்தையும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். 

இந்த கைது நடவடிக்கையையடுத்து இன்று அரச தகவல் திணைக்களத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. 

குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். 

இதனிடையே குறித்த கைது நடவடிக்கைக்கு இலங்கை பொலிஸார், குற்றப்புலனாய்வுத்துறை, இந்தியபொலிஸார், சர்வதேச பொலிஸார்ர் மற்றும் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் உதவியதாக அவர் தெரிவித்தார். 

கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களில் இலங்கைக்கு அழைத்துவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

பல சந்தர்ப்பங்களில், அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் கும்பல் வளர்ந்துள்ளதாகவும், தங்களின் இருப்பு மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  தெரிவித்தார். 

அத்தகைய நபர்களின் சொத்துக்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் அது குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்தார். 

இதுவரை, கிட்டத்தட்ட 75 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். 

இதேவேளை  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.  

அதன்படி, பல சிறப்பு மேல் நீதிமன்றங்களை நிறுவவும், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக முடித்து அவர்களுக்கு தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 


கைதுசெய்யப்பட்ட குற்றக்கும்பல் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு; சிறப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணை - பாதுகாப்பு அமைச்சர் அதிரடி செயலற்று காணப்பட்ட புலனாய்வு பிரிவுகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதன் காரணமாகவே குற்றக்கும்பல் உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கைது செய்யப்பட்ட குழுவில் கெஹல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் பெக்கோ சமனின் மனைவி மற்றும் மூன்று வயது குழந்தையும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். இந்த கைது நடவடிக்கையையடுத்து இன்று அரச தகவல் திணைக்களத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இதனிடையே குறித்த கைது நடவடிக்கைக்கு இலங்கை பொலிஸார், குற்றப்புலனாய்வுத்துறை, இந்தியபொலிஸார், சர்வதேச பொலிஸார்ர் மற்றும் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் உதவியதாக அவர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களில் இலங்கைக்கு அழைத்துவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பல சந்தர்ப்பங்களில், அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் கும்பல் வளர்ந்துள்ளதாகவும், தங்களின் இருப்பு மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  தெரிவித்தார். அத்தகைய நபர்களின் சொத்துக்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் அது குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்தார். இதுவரை, கிட்டத்தட்ட 75 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இதேவேளை  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.  அதன்படி, பல சிறப்பு மேல் நீதிமன்றங்களை நிறுவவும், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக முடித்து அவர்களுக்கு தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement