• Dec 13 2024

எங்களை தண்டித்த கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் சிறைப் படுத்தப்பட்டது போல் வீட்டில் முடங்கி உள்ளனர்- ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

Tamil nila / Nov 11th 2024, 10:40 pm
image

எங்களை சிறைப்படுத்தி பல்வேறு துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கி கடைசியில் நாங்கள் நிரபராதி என நீதிமன்றத்தினால் விடுவிக்கப் பட்டோம்.ஆனால் எங்களை தண்டித்த கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் இன்று சிறைப் படுத்தப்பட்டது போன்று வீட்டில் முடங்கி உள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று திங்கள் (11) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

வன்னி மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது தமிழ் பிரதிநிதித்துவம் உள்ளடங்களாக மூன்று ஆசனங்களை கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.மன்னார் மாவட்ட மக்கள் ஒன்று பட்டு கடந்த காலங்களில் யார் மக்களுக்கு பணி செய்தார்கள்,மக்களுடன் இருந்தார்கள்,மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்தார்கள் என்பதை உணர்ந்து நிச்சயமாக இத்தேர்தலில் வாக்களிப்பார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்ற எமது அணியினருக்கு,அதிக பட்ச ஆதரவை தருவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.வன்னி மாவட்டத்தில் கடந்த 2 தசாப்தங்களாக அமைச்சராகவும்,பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து என்னால் முடிந்த நல்ல பணிகளை செய்துள்ளேன்.இடம் பெயர்ந்த 3 லட்சம் மக்கள் மெனிக்பாம் நோக்கி வந்த போது அவர்களுக்கான பணிகளை நேர்மையாகச் செய்தோம்.

அவர்களை மீள் குடியேற்றம் செய்த போதுகிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா வடக்கு ,மாந்தை மேற்கு ,முசலி ,நானாட்டான்   , மடு போன்ற பகுதிகளில் அவர்கள் மீள் குடியேறுகின்ற போது கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு,வீடுகள் அமைத்து,பாதைகள் அமைத்து ,பாடசாலைகள் அமைத்து வைத்தியசாலைகளை மீள அமைத்து மகக்ளுக்கான அரச தனியார் தொழில் வாய்ப்புக்களை வழங்கி பல்வேறு பணிகளை முன்னெடுத்தோம்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒரு அரசியல்வாதி எவ்வாறு நேர்மையாக செயல்பட வேண்டுமோ அவ்வாறு செயல் பட்டுள்ளோம்.கடந்த காலங்களில் இனம்,மதம்,கட்சி பாராது எமது பணியை முன் னெடுத்தோம்.மன்னாரில் அமைக்கப்பட்ட ஜப்பான் பாலமாக இருக்கட்டும்,சங்குப்பிட்டி பாலமாக இருக்கலாம்,அரிப்பு பாலமாக இருக்கலாம்,அமைக்கப்பட்ட காபட் பாதைகளாக இருக்கலாம் பல நூறு கிராமங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்தி சமுர்த்தி திட்டத்தை நடை முறைப்படுத்தி பல நூறு சமுர்த்தி அதிகாரிகளை நியமித்து பல்வேறு பணிகளை இந்த மாவட்டத்தில் நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

எங்களால் முடிந்தவரை நாங்கள் நேர்மையாக செயல்பட்டோம்.இன்னும் செய்ய ஆவலாக உள்ளோம்.கடந்த நான்கு வருடங்களாக கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் எங்களை அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவும்,மக்களுக்கு பணி செய்யவும் இடமளிக்கவில்லை.

எங்களை சிறைப்படுத்தி பல்வேறு துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கி கடைசியில் நாங்கள் நிரபராதி என நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டோம்

ஆனால் எங்களை தண்டித்த கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் இன்று சிறைப் படுத்தப்பட்டது போன்று வீட்டில் முடங்கி உள்ளனர்.அவரது கட்சி இன்று அழிந்துள்ளது.

எமது கட்சியை பொறுத்தமட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு முழுவதும் பலமாக உயர்ந்து நிற்கிறது.10 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை இத்தேர்தலில் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.




எங்களை தண்டித்த கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் சிறைப் படுத்தப்பட்டது போல் வீட்டில் முடங்கி உள்ளனர்- ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு எங்களை சிறைப்படுத்தி பல்வேறு துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கி கடைசியில் நாங்கள் நிரபராதி என நீதிமன்றத்தினால் விடுவிக்கப் பட்டோம்.ஆனால் எங்களை தண்டித்த கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் இன்று சிறைப் படுத்தப்பட்டது போன்று வீட்டில் முடங்கி உள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.மன்னாரில் இன்று திங்கள் (11) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,,,வன்னி மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது தமிழ் பிரதிநிதித்துவம் உள்ளடங்களாக மூன்று ஆசனங்களை கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.மன்னார் மாவட்ட மக்கள் ஒன்று பட்டு கடந்த காலங்களில் யார் மக்களுக்கு பணி செய்தார்கள்,மக்களுடன் இருந்தார்கள்,மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்தார்கள் என்பதை உணர்ந்து நிச்சயமாக இத்தேர்தலில் வாக்களிப்பார்கள்.ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்ற எமது அணியினருக்கு,அதிக பட்ச ஆதரவை தருவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.வன்னி மாவட்டத்தில் கடந்த 2 தசாப்தங்களாக அமைச்சராகவும்,பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து என்னால் முடிந்த நல்ல பணிகளை செய்துள்ளேன்.இடம் பெயர்ந்த 3 லட்சம் மக்கள் மெனிக்பாம் நோக்கி வந்த போது அவர்களுக்கான பணிகளை நேர்மையாகச் செய்தோம்.அவர்களை மீள் குடியேற்றம் செய்த போதுகிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா வடக்கு ,மாந்தை மேற்கு ,முசலி ,நானாட்டான்   , மடு போன்ற பகுதிகளில் அவர்கள் மீள் குடியேறுகின்ற போது கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு,வீடுகள் அமைத்து,பாதைகள் அமைத்து ,பாடசாலைகள் அமைத்து வைத்தியசாலைகளை மீள அமைத்து மகக்ளுக்கான அரச தனியார் தொழில் வாய்ப்புக்களை வழங்கி பல்வேறு பணிகளை முன்னெடுத்தோம்.குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒரு அரசியல்வாதி எவ்வாறு நேர்மையாக செயல்பட வேண்டுமோ அவ்வாறு செயல் பட்டுள்ளோம்.கடந்த காலங்களில் இனம்,மதம்,கட்சி பாராது எமது பணியை முன் னெடுத்தோம்.மன்னாரில் அமைக்கப்பட்ட ஜப்பான் பாலமாக இருக்கட்டும்,சங்குப்பிட்டி பாலமாக இருக்கலாம்,அரிப்பு பாலமாக இருக்கலாம்,அமைக்கப்பட்ட காபட் பாதைகளாக இருக்கலாம் பல நூறு கிராமங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்தி சமுர்த்தி திட்டத்தை நடை முறைப்படுத்தி பல நூறு சமுர்த்தி அதிகாரிகளை நியமித்து பல்வேறு பணிகளை இந்த மாவட்டத்தில் நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.எங்களால் முடிந்தவரை நாங்கள் நேர்மையாக செயல்பட்டோம்.இன்னும் செய்ய ஆவலாக உள்ளோம்.கடந்த நான்கு வருடங்களாக கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் எங்களை அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவும்,மக்களுக்கு பணி செய்யவும் இடமளிக்கவில்லை.எங்களை சிறைப்படுத்தி பல்வேறு துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கி கடைசியில் நாங்கள் நிரபராதி என நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டோம்ஆனால் எங்களை தண்டித்த கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் இன்று சிறைப் படுத்தப்பட்டது போன்று வீட்டில் முடங்கி உள்ளனர்.அவரது கட்சி இன்று அழிந்துள்ளது.எமது கட்சியை பொறுத்தமட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு முழுவதும் பலமாக உயர்ந்து நிற்கிறது.10 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை இத்தேர்தலில் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

Advertisement