• Jan 05 2025

அரசும் எம்மை ஏமாற்றுவது போல் செயற்பட்டு வருகிறது - குணரட்டிணம் குணராஜன்

Tharmini / Dec 30th 2024, 10:53 am
image

மயிலிட்டி துறைமுகம் இந்திய படகுகள் நிறுத்தவா கட்டப்பட்டது. 

புதிய அரசாங்கமும்  நிம்மதியை தராது.

மயிலிட்டி கடற் தொழிலாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு.

மயிலிட்டித் துறைமுகத்தில் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் இந்திய ரோலர் படகுகளை கட்டுவதால் மயிலிட்டி மீனவர்கள் தொழில் செய்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மயிலிட்டி கடற் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் குணரட்டிணம் குணராஜன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும், தெரிவிக்கையில் வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகம் அதனை பயன்படுத்தி வந்த மீனவ சமூகத்துக்கு முழுமையாக கையளிக்கப்படவில்லை. 

இவ்வாறான நிலையில் எமது மீனவர்கள் சிறிய படகுகளில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய மீனவர்களின் கைது செய்யப்பட்ட ரோலர் படகுகள் இந்த துறைமுகத்தில் நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக எமது மீனவர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது படகுகளை கட்ட முடியாத சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

தற்போதைய புதிய அரசாங்கம் எமது மீனவர் பிரச்சினை தொடர்பில் தீர்வு வழங்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் தற்போது இந்த அரசாங்கமும் எம்மை ஏமாற்றுவது போல் செயற்பட்டு வருகிறது. 

சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளான டைனமட்டை பயன்படுத்தி மீன் பிடித்தல் சுருக்கு வலை கணவாய்குலை போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

புதிய கடல் தொழில் அமைச்சரை நமது மாநில துறைமுகப் பகுதியை வந்து பார்வையிட்டு மக்களின் துன்பத்தை பார்க்குமாறு பலமுறை கேட்டோம் ஆனால் அவர் இன்னும் வருகை தரவில்லை.

இந்தியா இழுவைப் படகுகள் தொடர்ச்சியாக மது கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து வருகிறது.

புதிய அரசாங்கம் பழைய பஞ்சாங்கத்தை பார்க்காது இந்திய ரோலர்களை தடுத்து நிறுத்துவதற்கு எமது கடல் எல்லைகளில் கடற்படையை நிறுத்த வேண்டும். 

ஆகவே ஜனாதிபதியிடம் வினயமாக நாம் கேட்டுக் கொள்வது, புதிய கடற்தொழில் அமைச்சர் ஊடாக, யாழ். கடற் பகுதிகளில் இடம்பெறும் சட்ட விரோத மீன் பிடிகளை நிறுத்துவதற்கு ஆவன செய்வதோடு இந்திய எல்லை தாண்டிய மீன்பிடிப் படகுகளை கைது செய்வதற்கு கடற்படையினரை எல்லையில்  கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசும் எம்மை ஏமாற்றுவது போல் செயற்பட்டு வருகிறது - குணரட்டிணம் குணராஜன் மயிலிட்டி துறைமுகம் இந்திய படகுகள் நிறுத்தவா கட்டப்பட்டது. புதிய அரசாங்கமும்  நிம்மதியை தராது.மயிலிட்டி கடற் தொழிலாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு.மயிலிட்டித் துறைமுகத்தில் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் இந்திய ரோலர் படகுகளை கட்டுவதால் மயிலிட்டி மீனவர்கள் தொழில் செய்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மயிலிட்டி கடற் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் குணரட்டிணம் குணராஜன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தெரிவிக்கையில் வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகம் அதனை பயன்படுத்தி வந்த மீனவ சமூகத்துக்கு முழுமையாக கையளிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எமது மீனவர்கள் சிறிய படகுகளில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய மீனவர்களின் கைது செய்யப்பட்ட ரோலர் படகுகள் இந்த துறைமுகத்தில் நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எமது மீனவர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது படகுகளை கட்ட முடியாத சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.தற்போதைய புதிய அரசாங்கம் எமது மீனவர் பிரச்சினை தொடர்பில் தீர்வு வழங்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் தற்போது இந்த அரசாங்கமும் எம்மை ஏமாற்றுவது போல் செயற்பட்டு வருகிறது. சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளான டைனமட்டை பயன்படுத்தி மீன் பிடித்தல் சுருக்கு வலை கணவாய்குலை போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.புதிய கடல் தொழில் அமைச்சரை நமது மாநில துறைமுகப் பகுதியை வந்து பார்வையிட்டு மக்களின் துன்பத்தை பார்க்குமாறு பலமுறை கேட்டோம் ஆனால் அவர் இன்னும் வருகை தரவில்லை.இந்தியா இழுவைப் படகுகள் தொடர்ச்சியாக மது கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து வருகிறது.புதிய அரசாங்கம் பழைய பஞ்சாங்கத்தை பார்க்காது இந்திய ரோலர்களை தடுத்து நிறுத்துவதற்கு எமது கடல் எல்லைகளில் கடற்படையை நிறுத்த வேண்டும். ஆகவே ஜனாதிபதியிடம் வினயமாக நாம் கேட்டுக் கொள்வது, புதிய கடற்தொழில் அமைச்சர் ஊடாக, யாழ். கடற் பகுதிகளில் இடம்பெறும் சட்ட விரோத மீன் பிடிகளை நிறுத்துவதற்கு ஆவன செய்வதோடு இந்திய எல்லை தாண்டிய மீன்பிடிப் படகுகளை கைது செய்வதற்கு கடற்படையினரை எல்லையில்  கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement