• May 19 2024

முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று அடையாள சின்னங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஸப்வான் ஸல்மான் வேண்டுகோள்!

Sharmi / Mar 17th 2023, 4:18 pm
image

Advertisement

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று அடையாள சின்னங்களை  பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் ஸல்மான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோண‌ம‌லை க‌ன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்க‌ள‌த்தின் ப‌ராம‌ரிப்பின் கீழ் கொண்டுவ‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.

மேலும், அத‌ன் அருகே ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் வாழ்ந்த‌ முஸ்லிம்க‌ளின் 40 அடி ச‌மாதிக‌ள் இர‌ண்டு காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. அவை சில‌ இன‌வாதிக‌ளால் சிதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. 

அவ‌ற்றையும் அர‌சு புன‌ர‌மைத்து சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் பார்வையிடும் இட‌மாக‌ மாற்ற‌ப்ப‌ட‌ வேண்டும்.

ஒரு சமூகம் வாழ்ந்தது என்பதற்கான அடையாளச் சின்னங்கள் அகற்றப்படுவது அல்லது மக்கள் அங்கு செல்ல முடியாத அளவு முடக்கப்படுவது அச்சமுகத்தின் வரலாற்றை மறைப்பதற்கான ஏற்பாடாகவே பார்க்க முடிகிறது. 

இலங்கையின் பல்வேறு முஸ்லிம்களோடு தொடர்புபட்ட இது போன்ற அடையாளங்கள் இனவாதிகளின் சில மோசமான செயற்பாடுகள் காரணமாக அரசுடமையாக்கப்பட்டு அங்கு மக்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளன.

இவை முஸ்லிம்களின் அடையாளச் சின்னங்களை அழிப்பதற்கு திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 

இப்படியான நிலைமைகள் மேலும் தொடருமானால், அடுத்த தலைமுறையினர் இலங்கையில் பன்மைக்கால முஸ்லிம்கள் இருந்தார்கள் என்பதற்கு சான்றுகளை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

எனவே முஸ்லிம்கள் தமது வரலாற்று ஆதாரங்களாக அல்லது புனித இடங்களாக மதிக்கக் கூடிய இடங்களில் தீய சக்திகள் கை வைக்காமலும் அது பொதுமக்கள் பாவனையில் இருக்கும் விதமாகவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் ஸல்மான் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று அடையாள சின்னங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஸப்வான் ஸல்மான் வேண்டுகோள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று அடையாள சின்னங்களை  பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் ஸல்மான் தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,திருகோண‌ம‌லை க‌ன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்க‌ள‌த்தின் ப‌ராம‌ரிப்பின் கீழ் கொண்டுவ‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும், அத‌ன் அருகே ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் வாழ்ந்த‌ முஸ்லிம்க‌ளின் 40 அடி ச‌மாதிக‌ள் இர‌ண்டு காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. அவை சில‌ இன‌வாதிக‌ளால் சிதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. அவ‌ற்றையும் அர‌சு புன‌ர‌மைத்து சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் பார்வையிடும் இட‌மாக‌ மாற்ற‌ப்ப‌ட‌ வேண்டும்.ஒரு சமூகம் வாழ்ந்தது என்பதற்கான அடையாளச் சின்னங்கள் அகற்றப்படுவது அல்லது மக்கள் அங்கு செல்ல முடியாத அளவு முடக்கப்படுவது அச்சமுகத்தின் வரலாற்றை மறைப்பதற்கான ஏற்பாடாகவே பார்க்க முடிகிறது. இலங்கையின் பல்வேறு முஸ்லிம்களோடு தொடர்புபட்ட இது போன்ற அடையாளங்கள் இனவாதிகளின் சில மோசமான செயற்பாடுகள் காரணமாக அரசுடமையாக்கப்பட்டு அங்கு மக்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளன.இவை முஸ்லிம்களின் அடையாளச் சின்னங்களை அழிப்பதற்கு திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இப்படியான நிலைமைகள் மேலும் தொடருமானால், அடுத்த தலைமுறையினர் இலங்கையில் பன்மைக்கால முஸ்லிம்கள் இருந்தார்கள் என்பதற்கு சான்றுகளை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகும்.எனவே முஸ்லிம்கள் தமது வரலாற்று ஆதாரங்களாக அல்லது புனித இடங்களாக மதிக்கக் கூடிய இடங்களில் தீய சக்திகள் கை வைக்காமலும் அது பொதுமக்கள் பாவனையில் இருக்கும் விதமாகவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் ஸல்மான் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement