• Oct 01 2024

வடக்கு ஆளுநருக்கு சட்டமும் தெரியாது, ஜனநாயகமும் தெரியாது – பதவி விலகவேண்டும்! SamugamMedia

Chithra / Mar 25th 2023, 12:14 pm
image

Advertisement

இலங்கையில் அரசியலமைப்பினை மீறி செயற்பட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் உடனடியாக பதவி விலகவேண்டுமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் மீன்பிடி அமைச்சரின் செயலாளருமான சின்னத்துரை தவராசா தெரவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலா பணியகம் மற்றும் வாழ்வாதார முகாமைத்துவ நியதிச் சட்டங்கள் என இரு சட்டங்களை வர்த்தமானியில் பிரசுரித்திருந்தார்.

இதற்கு எதிராக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தொடுத்த வழக்கு நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றபோது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையானவர், வடக்கு ஆளுநருக்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டதான விடயத்தின் மூலம்  ஆளுநருக்கு நியதிச் சட்டம் உருவாக்கும் அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அறிந்துகொள்ளாமல் வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றிருந்தாலும்  அதன் பின்னர் அவர் அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்த தவராசா எனவே அந்தப் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் அதனை தற்போதைய ஆளுநரிடம் இருந்து அறவே எதிர்பாரக்க முடியாது எனவும் ஏனெனில் அவருக்கு சட்டமும் தெரியாது, நிர்வாகமும் தெரியாது, ஜனநாயகமும் தெரியாது என்றும் தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுநருக்கு சட்டமும் தெரியாது, ஜனநாயகமும் தெரியாது – பதவி விலகவேண்டும் SamugamMedia இலங்கையில் அரசியலமைப்பினை மீறி செயற்பட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் உடனடியாக பதவி விலகவேண்டுமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் மீன்பிடி அமைச்சரின் செயலாளருமான சின்னத்துரை தவராசா தெரவித்துள்ளார்.வடக்கு மாகாணத்தில் சுற்றுலா பணியகம் மற்றும் வாழ்வாதார முகாமைத்துவ நியதிச் சட்டங்கள் என இரு சட்டங்களை வர்த்தமானியில் பிரசுரித்திருந்தார்.இதற்கு எதிராக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தொடுத்த வழக்கு நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றபோது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையானவர், வடக்கு ஆளுநருக்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டதான விடயத்தின் மூலம்  ஆளுநருக்கு நியதிச் சட்டம் உருவாக்கும் அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.எனவே அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அறிந்துகொள்ளாமல் வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றிருந்தாலும்  அதன் பின்னர் அவர் அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்த தவராசா எனவே அந்தப் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இருப்பினும் அதனை தற்போதைய ஆளுநரிடம் இருந்து அறவே எதிர்பாரக்க முடியாது எனவும் ஏனெனில் அவருக்கு சட்டமும் தெரியாது, நிர்வாகமும் தெரியாது, ஜனநாயகமும் தெரியாது என்றும் தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement