• Sep 11 2024

காதலியை பார்க்க சென்ற காதலனுக்கு ஏற்பட்ட துயரம்; பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்

Chithra / Aug 13th 2024, 1:07 pm
image

Advertisement


நீர்கொழும்பில் இருந்து சிலாபம் தொடுவா பிரதேசத்திற்கு தனது 19 வயதுடைய காதலியை தேடிச் சென்ற 30 வயதுடைய இளைஞனின் சடலம் குறித்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக தொடுவா பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு, திபிரிகஸ்கட்டுவ ஹரிச்சந்திர புர பிரதேசத்தை சேர்ந்த சமித் மதுசங்க என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த நபர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர் வசித்து வந்த அதே பகுதியில் உள்ள 19 வயது இளம்பெண் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

தங்களுடைய மகள் திருமணமான ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு வருவதை அறிந்த குறித்த பெண்ணின் பெற்றோர்கள் மகளை, மஹவெவ தொடுவா பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த இளைஞன் கடந்த 10ஆம் திகதி இரவு தனது காதலியை தேடி அவர் தங்கி இருந்த வீட்டருகில் சென்று மறைவாக இருந்துள்ளார்.

வீட்டின் பின்பகுதியிலிருந்து வந்த காதலன், குடியிருப்பாளர்களை கண்டு பயந்து ஓடிய போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.

காதலன் வந்திருப்பதாக வீட்டின் உரிமையாளரிடம் காதலி கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வெளியே வந்துள்ளார்.

காதலி உரிமையாளரிடம் கூறிய விடயத்தை அறியாத காதலன் தவறி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

காதலியை பார்க்க சென்ற காதலனுக்கு ஏற்பட்ட துயரம்; பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் நீர்கொழும்பில் இருந்து சிலாபம் தொடுவா பிரதேசத்திற்கு தனது 19 வயதுடைய காதலியை தேடிச் சென்ற 30 வயதுடைய இளைஞனின் சடலம் குறித்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக தொடுவா பொலிஸார் தெரிவித்தனர்.நீர்கொழும்பு, திபிரிகஸ்கட்டுவ ஹரிச்சந்திர புர பிரதேசத்தை சேர்ந்த சமித் மதுசங்க என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த நபர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர் வசித்து வந்த அதே பகுதியில் உள்ள 19 வயது இளம்பெண் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.தங்களுடைய மகள் திருமணமான ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு வருவதை அறிந்த குறித்த பெண்ணின் பெற்றோர்கள் மகளை, மஹவெவ தொடுவா பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.இது தொடர்பாக தகவல் அறிந்த இளைஞன் கடந்த 10ஆம் திகதி இரவு தனது காதலியை தேடி அவர் தங்கி இருந்த வீட்டருகில் சென்று மறைவாக இருந்துள்ளார்.வீட்டின் பின்பகுதியிலிருந்து வந்த காதலன், குடியிருப்பாளர்களை கண்டு பயந்து ஓடிய போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.காதலன் வந்திருப்பதாக வீட்டின் உரிமையாளரிடம் காதலி கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வெளியே வந்துள்ளார்.காதலி உரிமையாளரிடம் கூறிய விடயத்தை அறியாத காதலன் தவறி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement