• Apr 27 2024

நெஞ்சிருக்கும் வரை நாயகி, மிக மோசமான நோயால் பாதிப்பு!

crownson / Dec 1st 2022, 12:52 pm
image

Advertisement

பிரபல தெலுங்கு நடிகை பூனம் கவுர் தமிழில் நெஞ்சிருக்கும், வரை உன்னை போல் ஒருவன், வெடி உட்பட பல வெற்றி படங்களில் நடித்தவர்.

கடந்த காலங்களில் தமிழில் வாய்ப்பு இல்லாதபோதும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அவருக்கு புதிய வகையான நோய் என்று பரவி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் பைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது 'பரவலான தசைக்கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம்' ஆகிய பிரச்னைகளை கொண்டிருக்கும்.

பல மொழிகளில் நடித்துள்ள பூனம், சமீபத்தில் கேரளாவில் இருந்தார். அப்போது அவருக்கு இந்த பிரச்னை இருப்பது நிபுணர்களால் கண்டறியப்பட்டது.

இதற்கு அறிகுறிகளைக் கண்டறிந்து வாழ்க்கை முறையை மாற்றி, உடற்பயிற்சி, தெரபிகள் மற்றும் சிகிச்சைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

இந்த பைப்ரோமியால்ஜியா ஒருவருக்கு வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அதோடு அவர் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என மெடிக்கல் போர்ட்டல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூனம் கவுருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான உடல் வலி இருந்ததாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெலுங்கு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மாநிலங்களில் சமூக செயல்பாட்டாளராக வலம் வரும் பூனம், கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் விதத்தில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றிருந்தார்.

36 வயதாகும் பூனம், தமிழில் நெஞ்சிருக்கும் வரை, திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களை இவர் தன்வசம் ஈர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

நெஞ்சிருக்கும் வரை நாயகி, மிக மோசமான நோயால் பாதிப்பு பிரபல தெலுங்கு நடிகை பூனம் கவுர் தமிழில் நெஞ்சிருக்கும், வரை உன்னை போல் ஒருவன், வெடி உட்பட பல வெற்றி படங்களில் நடித்தவர். கடந்த காலங்களில் தமிழில் வாய்ப்பு இல்லாதபோதும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு புதிய வகையான நோய் என்று பரவி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவர் பைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.இது 'பரவலான தசைக்கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம்' ஆகிய பிரச்னைகளை கொண்டிருக்கும்.பல மொழிகளில் நடித்துள்ள பூனம், சமீபத்தில் கேரளாவில் இருந்தார். அப்போது அவருக்கு இந்த பிரச்னை இருப்பது நிபுணர்களால் கண்டறியப்பட்டது.இதற்கு அறிகுறிகளைக் கண்டறிந்து வாழ்க்கை முறையை மாற்றி, உடற்பயிற்சி, தெரபிகள் மற்றும் சிகிச்சைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இந்த பைப்ரோமியால்ஜியா ஒருவருக்கு வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அதோடு அவர் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என மெடிக்கல் போர்ட்டல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.பூனம் கவுருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான உடல் வலி இருந்ததாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெலுங்கு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். தெலுங்கு மாநிலங்களில் சமூக செயல்பாட்டாளராக வலம் வரும் பூனம், கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் விதத்தில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றிருந்தார். 36 வயதாகும் பூனம், தமிழில் நெஞ்சிருக்கும் வரை, திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களை இவர் தன்வசம் ஈர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement