"பசி உள்ளோர் சாப்பிடலாம் வசதி படைத்தோர் பசியாற உதவிக்கரம் நீட்டலாம்" எனும் தொனிப்பொருளில் சமூக நலன் சார்ந்த வேலைத்திட்டமொன்று மூதூர் -மார்க்கட் வீதியில் இன்று(12) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூதூரில் சமூக சேவை செய்து வரும் "தடயம்" சமூகத் தொண்டு அமைப்பு இதனை ஆரம்பித்து வைத்துள்ளது.
வசதி படைத்தோர் தங்களிடம் இருக்கின்ற உணவுப் பொருட்களை குறித்த இடத்தில் வைத்துச் செல்ல முடியும் எனவும் பசி உள்ளோர் யாராக இருந்தாலும் அங்குள்ள உணவுகளை எடுத்துச் சென்று சாப்பிட கூடிய வகையில் இந்தச் செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இன,மத,பேதங்களை கடந்து சகல ஏழைகளுக்கும் வயிறார உணவளிப்பதற்காக இந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும், உதவி செய்ய விரும்புவோர் குறித்த இடத்தில் தங்களது உணவுகளை வைத்துச் செல்ல முடியுமென தடயம் சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.