• Jan 11 2025

விக்கினேஸ்வரன் எம்.பி தலைமையில் யாழில் இடம்பெறவுள்ள முக்கிய மாநாடு...!

Sharmi / Jul 13th 2024, 11:16 am
image

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மகாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கில் இம் மகாநாடு நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வீ. விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மகாநாட்டில், பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொள்ளவுள்ளார்.

இந் நிகழ்வில் சிறப்புரையை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் ஆற்றவுள்ளார்.

இதன்போது, கலை நிகழ்வுகள், விசேட உரைகள் என்பன இடம்பெற்று மாநாட்டின் தீர்மானங்களும் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விக்கினேஸ்வரன் எம்.பி தலைமையில் யாழில் இடம்பெறவுள்ள முக்கிய மாநாடு. தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மகாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கில் இம் மகாநாடு நடைபெறவுள்ளது.தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வீ. விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மகாநாட்டில், பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொள்ளவுள்ளார்.இந் நிகழ்வில் சிறப்புரையை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் ஆற்றவுள்ளார்.இதன்போது, கலை நிகழ்வுகள், விசேட உரைகள் என்பன இடம்பெற்று மாநாட்டின் தீர்மானங்களும் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement