• Jul 09 2025

கந்தளாயில் நாளுக்குநாள் அதிகரிக்கும் குரங்குகளின் தொல்லை - பொதுமக்களின் வாழ்க்கை பாதிப்பு

Chithra / Jul 9th 2025, 9:31 am
image


கந்தளாயில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக வாழை, தென்னை, மா, பலா போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை குரங்குகள் அழித்து விடுவதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

கந்தளாய் பேராறு, பேராற்று வெளி, அனைக்கட், மதுரசா நகர், ரஜ எல, வான் எல மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கிறது. 

வனத்துறை அதிகாரிகள், குரங்குகளை பிடித்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


கந்தளாயில் நாளுக்குநாள் அதிகரிக்கும் குரங்குகளின் தொல்லை - பொதுமக்களின் வாழ்க்கை பாதிப்பு கந்தளாயில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக வாழை, தென்னை, மா, பலா போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை குரங்குகள் அழித்து விடுவதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.கந்தளாய் பேராறு, பேராற்று வெளி, அனைக்கட், மதுரசா நகர், ரஜ எல, வான் எல மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கிறது. வனத்துறை அதிகாரிகள், குரங்குகளை பிடித்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement