• May 17 2024

மூதூரில் டெங்கு பரவல் தீவிரம்..! பிரதேச செயலகம் நடவடிக்கை..!samugammedia

Sharmi / Jun 5th 2023, 11:59 am
image

Advertisement

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மைக் காலமாக டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி சங்கத்தினர்,இளைஞர்கள்,விளையாட்டு கழகங்கள்,மதஸ்தல நிருவாகத்தினர் உள்ளிட்ட சமூக மட்ட அங்கத்துவர்களிடம் கலந்துரையாடி மூதூரிலிருந்து டெங்கினை ஒழிப்பதற்கான விசேட கூட்டம் மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

இதன்போது டெங்கு பரவும் இடங்களை இணங்கண்டு  சிரமதானம் மேற்கொள்ளல்,பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்,டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

இதில் மூதூர் பிரதேச செயலாளர்,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி,மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ,மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர்,பொலிஸார்,கிராம உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



மூதூரில் டெங்கு பரவல் தீவிரம். பிரதேச செயலகம் நடவடிக்கை.samugammedia மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மைக் காலமாக டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி சங்கத்தினர்,இளைஞர்கள்,விளையாட்டு கழகங்கள்,மதஸ்தல நிருவாகத்தினர் உள்ளிட்ட சமூக மட்ட அங்கத்துவர்களிடம் கலந்துரையாடி மூதூரிலிருந்து டெங்கினை ஒழிப்பதற்கான விசேட கூட்டம் மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.இதன்போது டெங்கு பரவும் இடங்களை இணங்கண்டு  சிரமதானம் மேற்கொள்ளல்,பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்,டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.இதில் மூதூர் பிரதேச செயலாளர்,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி,மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ,மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர்,பொலிஸார்,கிராம உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement