• Nov 22 2024

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு விவகாரம்...! திருமலையில் இன்று வழக்கு விசாரணை...!

Sharmi / Feb 29th 2024, 11:02 am
image

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை மாநாடு, நிர்வாகத் தெரிவு என்பவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று(29)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பாக திருகோணமலையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முன்னிலையாகவுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 19ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தநிலையில், அதற்குத் தடை விதிக்கக்கோரி யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான பீற்றர் இளஞ்செழியன் யாழ்ப்பாணத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணைகள் கடந்த15ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றன

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் ச. குகதாசன் மற்றும் குலநாயகம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான யோகேஸ்வரன் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை உறுப்பினர் சந்திரசேகரம் பரா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைகள் திரு கோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்க வாசகர் கணேசராஜா முன்னிலையில் நடைபெற்றன.

மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், வழக்கை இன்றுவரை ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு விவகாரம். திருமலையில் இன்று வழக்கு விசாரணை. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை மாநாடு, நிர்வாகத் தெரிவு என்பவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று(29)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பாக திருகோணமலையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முன்னிலையாகவுள்ளார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 19ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தநிலையில், அதற்குத் தடை விதிக்கக்கோரி யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான பீற்றர் இளஞ்செழியன் யாழ்ப்பாணத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணைகள் கடந்த15ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றனதமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் ச. குகதாசன் மற்றும் குலநாயகம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான யோகேஸ்வரன் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை உறுப்பினர் சந்திரசேகரம் பரா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைகள் திரு கோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்க வாசகர் கணேசராஜா முன்னிலையில் நடைபெற்றன.மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், வழக்கை இன்றுவரை ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement