• Sep 19 2024

கொக்குதொடுவாய் மனித புதைகுழி முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது! சட்டவைத்திய அதிகாரி தகவல் samugammedia

Chithra / Nov 28th 2023, 1:53 pm
image

Advertisement


கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு  மையப்புள்ளி வரை    விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் ஏழாவது நாளாக இடம்பெற்று  நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார். 

 நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. 

இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.

இன்றையதினம் (28.11.2023) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.


கொக்குதொடுவாய் மனித புதைகுழி முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது சட்டவைத்திய அதிகாரி தகவல் samugammedia கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு  மையப்புள்ளி வரை    விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் ஏழாவது நாளாக இடம்பெற்று  நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.  நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.இன்றையதினம் (28.11.2023) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement