• May 19 2024

பிரிந்த ஜோடிகளை மீண்டும் கட்டாயமாகச் சேர்த்து வைக்கும் சட்டம்: தொடரும் தாலிபான்களின் அராஜகம்!! SamugamMedia

Tamil nila / Mar 7th 2023, 11:14 pm
image

Advertisement

ஆப்கானிஸ்தான் நாட்டில் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் விவாகரத்து செய்த பெண்களை மீண்டும் அதே கணவரோடு சேர்ந்து வாழ வேண்டுமென தாலிபான்கள் போட்ட சட்டத்தால் அந்நாட்டில் பெண்கள் மிகவும் அச்சத்திலிருக்கிறார்கள்.



மதத்தின் அடிப்படையில் தாலிபான்கள், பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தான் மீண்டும் அங்கு அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.



பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை விதிப்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர். முதலில் பெண்கள் உயர் கல்வி பெற கூடாது, ஓட்டுனர் உரிமம் வாங்க கூடாது, உடலை முழுவதும் மூடிக்கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும், கருத்தடை ரத்து மேலும் கணவர் துணையின்றி பெண்கள் தனியாக செல்ல கூடாது என பல திட்டங்களை போட்டனர். அதனால் அந்நாட்டு பெண்கள் இதற்கு எதிராக போராடியும் அதற்குண்டான நீதி கிடைக்கவில்லை.



கணவரின் கொடுமை தாங்காமல் ஆப்கானிஸ்தான் பெண்கள் பல இன்னல்களை சந்தித்து வந்தனர். இதனால் தாலிபான் ஆட்சிக்கு முன் பலரும் விவாகரத்து வாங்கியிருந்தனர். இந்த நிலையில் தாலிபான்கள் விவாகரத்து பெற்ற பெண்கள் மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.



மேலும் சில தாலிபான்கள் அவர்களை தேடி பிடித்து வழுகட்டாயமாக சேர்த்து வைக்கிறார்கள். இதற்கு பயந்து பல பெண்கள் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். அது மட்டுமில்லாது இனி விவாகரத்து பெற தடை என சட்டம் கொண்டு வரப்போவதாக தாலிபான்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடுமையாக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தாலிபான்கள் செவி சாய்ப்பதேயில்லை.



இதுபற்றி அந்த நாட்டை சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது ‛‛ என்னை எனது கணவர் துன்புறுத்தினார். அடித்து தாக்கியதில் பற்களை இழந்தேன். இதனால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ தொடங்கினேன். தற்போது விவாகரத்தை ரத்து செய்து மீண்டும் 8 குழந்தைகளுடன் கணவரோடு சேர்ந்து வாழ வலியுத்துகின்றனர்.


இதனால் நான் தலைமறைவு வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளேன். தாலிபான்கள் ஆட்சி கொடுமையாக உள்ளது. இவர்களின் ஆட்சியில் தினம் தினம் நான் அழுகிறேன்'' என்கிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு உலக நாடுகள் பலவும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  

பிரிந்த ஜோடிகளை மீண்டும் கட்டாயமாகச் சேர்த்து வைக்கும் சட்டம்: தொடரும் தாலிபான்களின் அராஜகம் SamugamMedia ஆப்கானிஸ்தான் நாட்டில் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் விவாகரத்து செய்த பெண்களை மீண்டும் அதே கணவரோடு சேர்ந்து வாழ வேண்டுமென தாலிபான்கள் போட்ட சட்டத்தால் அந்நாட்டில் பெண்கள் மிகவும் அச்சத்திலிருக்கிறார்கள்.மதத்தின் அடிப்படையில் தாலிபான்கள், பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தான் மீண்டும் அங்கு அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை விதிப்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர். முதலில் பெண்கள் உயர் கல்வி பெற கூடாது, ஓட்டுனர் உரிமம் வாங்க கூடாது, உடலை முழுவதும் மூடிக்கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும், கருத்தடை ரத்து மேலும் கணவர் துணையின்றி பெண்கள் தனியாக செல்ல கூடாது என பல திட்டங்களை போட்டனர். அதனால் அந்நாட்டு பெண்கள் இதற்கு எதிராக போராடியும் அதற்குண்டான நீதி கிடைக்கவில்லை.கணவரின் கொடுமை தாங்காமல் ஆப்கானிஸ்தான் பெண்கள் பல இன்னல்களை சந்தித்து வந்தனர். இதனால் தாலிபான் ஆட்சிக்கு முன் பலரும் விவாகரத்து வாங்கியிருந்தனர். இந்த நிலையில் தாலிபான்கள் விவாகரத்து பெற்ற பெண்கள் மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.மேலும் சில தாலிபான்கள் அவர்களை தேடி பிடித்து வழுகட்டாயமாக சேர்த்து வைக்கிறார்கள். இதற்கு பயந்து பல பெண்கள் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். அது மட்டுமில்லாது இனி விவாகரத்து பெற தடை என சட்டம் கொண்டு வரப்போவதாக தாலிபான்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடுமையாக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தாலிபான்கள் செவி சாய்ப்பதேயில்லை.இதுபற்றி அந்த நாட்டை சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது ‛‛ என்னை எனது கணவர் துன்புறுத்தினார். அடித்து தாக்கியதில் பற்களை இழந்தேன். இதனால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ தொடங்கினேன். தற்போது விவாகரத்தை ரத்து செய்து மீண்டும் 8 குழந்தைகளுடன் கணவரோடு சேர்ந்து வாழ வலியுத்துகின்றனர்.இதனால் நான் தலைமறைவு வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளேன். தாலிபான்கள் ஆட்சி கொடுமையாக உள்ளது. இவர்களின் ஆட்சியில் தினம் தினம் நான் அழுகிறேன்'' என்கிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு உலக நாடுகள் பலவும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  

Advertisement

Advertisement

Advertisement