• Feb 25 2025

காணாமல் ஆக்கப்பட் டோரின் 3000 ஆவது நாள் நிறைவடையும் தினத்தில் பிரிந்த தாயின் உயிர்!

Tharmini / Feb 24th 2025, 5:31 pm
image

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டமானது 3000வது நாளான இன்று  தனது மகனை தேடிவந்த 

தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்தார்.

வவுனியா தோனிக்கல்லினை சேர்ந்த வேலுச்சாமி மாரி ( மாரி அம்மா) என்பவரே தனது 79வது வயதில் மரணமடைந்துள்ளார்.

இவரின் மகனான வேலுச்சாமி சிவகுமார் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல் ஆக்கப்பட்டார்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார்.

இதேவேளை தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தில் தொடர்ச்சியாக இணைந்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மரணித்திற்கு முன்பதாக தனது மகனை நேரில் பார்த்து விடுவேன் என ஏங்கிய ஒரு தாயின் ஏக்கம் இன்றுடன் நிறைவேறாமல் முற்றுப் பெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட் டோரின் 3000 ஆவது நாள் நிறைவடையும் தினத்தில் பிரிந்த தாயின் உயிர் வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டமானது 3000வது நாளான இன்று  தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்தார்.வவுனியா தோனிக்கல்லினை சேர்ந்த வேலுச்சாமி மாரி ( மாரி அம்மா) என்பவரே தனது 79வது வயதில் மரணமடைந்துள்ளார்.இவரின் மகனான வேலுச்சாமி சிவகுமார் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல் ஆக்கப்பட்டார்.இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார்.இதேவேளை தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தில் தொடர்ச்சியாக இணைந்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.தனது மரணித்திற்கு முன்பதாக தனது மகனை நேரில் பார்த்து விடுவேன் என ஏங்கிய ஒரு தாயின் ஏக்கம் இன்றுடன் நிறைவேறாமல் முற்றுப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement