• May 19 2024

ஊடகவியலாளர் மாணிக்கவாசகத்தின் இழப்பு, தழிழர் தேசத்திற்குப் பேரிழப்பு! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் samugammedia

Chithra / Apr 16th 2023, 11:12 am
image

Advertisement

உண்மைக்கு முன்னால் நடுநடுநிலைமை என்பது இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தியவர் உன்னத ஊடக ஆசான் பொன்னையா மாணிக்கவாசகம் ஆவார். மூத்த ஊடகப் பேராசானை தமிழர் தேசம் இழந்தமை தமிழர் தேசத்திற்கும், உலகிற்கும் பேரிழப்பாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எல்லோர் மனங்களிலும் வாழும் ஊடகப் போராளிக்கு தமிழீழ தேசத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தலை சாய்த்து தனது இறுதி வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றத.

தமிழர்தேசம் பெரும் நெருக்கடியிலும் இனப்படுகொலைக்கும் மத்தியில், மனச்சாட்சியும், மனித நேயமும் அற்ற உலகம் தனது கண்களை இறுகமூடி தமிழர்கள் பட்ட சொல்லொணாத் துயர், பெரும் இனப்படு கொலைகளை மெளனமாக ஆதரித்த அவ்வேளை இவரைப் போன்ற ஊடக உத்தமர்களே மனச்சாட்சியுடன் நடந்து தமிழர் தேசத்தின் உண்மை நிலையை உலகறியச் செய்தார்கள்.

இவர் இலங்கைத்தீவின் மத்திய மலை நாட்டில் 1946 சித்திரை முதலாம் திகதி (01/04/1946) தலவாக்கொல்லையில் பிறந்தார். பிரபல உள்ளூர் ஊடகம் மற்றும், பி.பி.சி தமிழோசை, றொயிட்டர் போன்ற சர்வதேச ஊடங்களிலும் பணியாற்றினார். 

இவர் தமிழீத் தேசியத் தலைவர் மீதும், விடுதலைப் போராளிகள்மீதும் மட்டற்ற மதிப்பும்,  அன்பும், நம்பிக்கையும் கொண்டிருந்தார். 

தமிழர்களின் பெரும் அவலங்களை தனது மனச்சுமையுடன் உலகறியச் செய்தவர். அடுத்த தலை முறை உண்மையான வரலாற்றை அறிய துடிக்கும் மாற்றத்தை தேடும் மாற்றுத் திறனாளிகள், கால அதிர்வுகள், வாழத் துடிக்கும் வன்னி போன்ற உண்மையான நூல்களை வடித்து தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி உள்ளார். 

உண்மைகளை உரத்துச் சொல்லியதால் பயங்கரவாதச் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டும் தனது ஊடகப் பணியில் 12/04/2023 இல் இறுதி ஓய்வு பெறும்வரை உண்மைக்காக உழைத்தார்.

இவரது இழப்பால் ஆழ்துயரில் தவிக்கும் மனைவி, பிள்ளைகள்,  உறவினர் மற்றும் ஏனைய ஊடக நண்பர்களோடு நாடுகடந்த அரசாங்கமும் இணந்து கொள்கிறது மதிப்புக்குரிய மாணிக்கவாசகம் அவர்கள் சாவை வென்றவராக தமிழர் தேசத்திலும், உலகிலும் என்றும் நிலைத்திருப்பார்.-என்றுள்ளது.

ஊடகவியலாளர் மாணிக்கவாசகத்தின் இழப்பு, தழிழர் தேசத்திற்குப் பேரிழப்பு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் samugammedia உண்மைக்கு முன்னால் நடுநடுநிலைமை என்பது இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தியவர் உன்னத ஊடக ஆசான் பொன்னையா மாணிக்கவாசகம் ஆவார். மூத்த ஊடகப் பேராசானை தமிழர் தேசம் இழந்தமை தமிழர் தேசத்திற்கும், உலகிற்கும் பேரிழப்பாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,எல்லோர் மனங்களிலும் வாழும் ஊடகப் போராளிக்கு தமிழீழ தேசத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தலை சாய்த்து தனது இறுதி வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றத.தமிழர்தேசம் பெரும் நெருக்கடியிலும் இனப்படுகொலைக்கும் மத்தியில், மனச்சாட்சியும், மனித நேயமும் அற்ற உலகம் தனது கண்களை இறுகமூடி தமிழர்கள் பட்ட சொல்லொணாத் துயர், பெரும் இனப்படு கொலைகளை மெளனமாக ஆதரித்த அவ்வேளை இவரைப் போன்ற ஊடக உத்தமர்களே மனச்சாட்சியுடன் நடந்து தமிழர் தேசத்தின் உண்மை நிலையை உலகறியச் செய்தார்கள்.இவர் இலங்கைத்தீவின் மத்திய மலை நாட்டில் 1946 சித்திரை முதலாம் திகதி (01/04/1946) தலவாக்கொல்லையில் பிறந்தார். பிரபல உள்ளூர் ஊடகம் மற்றும், பி.பி.சி தமிழோசை, றொயிட்டர் போன்ற சர்வதேச ஊடங்களிலும் பணியாற்றினார். இவர் தமிழீத் தேசியத் தலைவர் மீதும், விடுதலைப் போராளிகள்மீதும் மட்டற்ற மதிப்பும்,  அன்பும், நம்பிக்கையும் கொண்டிருந்தார். தமிழர்களின் பெரும் அவலங்களை தனது மனச்சுமையுடன் உலகறியச் செய்தவர். அடுத்த தலை முறை உண்மையான வரலாற்றை அறிய துடிக்கும் மாற்றத்தை தேடும் மாற்றுத் திறனாளிகள், கால அதிர்வுகள், வாழத் துடிக்கும் வன்னி போன்ற உண்மையான நூல்களை வடித்து தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி உள்ளார். உண்மைகளை உரத்துச் சொல்லியதால் பயங்கரவாதச் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டும் தனது ஊடகப் பணியில் 12/04/2023 இல் இறுதி ஓய்வு பெறும்வரை உண்மைக்காக உழைத்தார்.இவரது இழப்பால் ஆழ்துயரில் தவிக்கும் மனைவி, பிள்ளைகள்,  உறவினர் மற்றும் ஏனைய ஊடக நண்பர்களோடு நாடுகடந்த அரசாங்கமும் இணந்து கொள்கிறது மதிப்புக்குரிய மாணிக்கவாசகம் அவர்கள் சாவை வென்றவராக தமிழர் தேசத்திலும், உலகிலும் என்றும் நிலைத்திருப்பார்.-என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement