• Sep 21 2024

மன்னாரில் 15 ஏக்கர் அரச காணியை இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயன்ற நபர்கள் - இராணுவம், பொலிஸாரை கண்டதும் தப்பி ஓட்டம் samugammedia

Chithra / Sep 1st 2023, 8:25 am
image

Advertisement

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில்   சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் நேற்று வியாழக்கிழமை (31) இரவு ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்பரவு செய்த நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில், இயந்திரங்களை கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த பகுதிதியில் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி காடுகளை அழித்து காணியை துப்புரவு செய்து கொண்டு இருப்பதாக இலுப்பைக்கடவை பொலிஸார் மற்றும் இராணுவத்தின் 541 வது படைப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவம் மற்றும் பொலிஸார் அப்பகுதிக்குச் சென்றனர்.

இதன் போது ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்புரவு செய்து கொண்டிருந்த நபர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரை கண்ட நிலையில் ஜே.சி.பி இயந்திரங்களை அங்கேயே கை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் காணியை துப்பரவு செய்ய பயன்படுத்திய 3 ஜே.சி.பி இயந்திரங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மன்னாரில் 15 ஏக்கர் அரச காணியை இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயன்ற நபர்கள் - இராணுவம், பொலிஸாரை கண்டதும் தப்பி ஓட்டம் samugammedia மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில்   சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் நேற்று வியாழக்கிழமை (31) இரவு ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்பரவு செய்த நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில், இயந்திரங்களை கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த பகுதிதியில் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி காடுகளை அழித்து காணியை துப்புரவு செய்து கொண்டு இருப்பதாக இலுப்பைக்கடவை பொலிஸார் மற்றும் இராணுவத்தின் 541 வது படைப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவம் மற்றும் பொலிஸார் அப்பகுதிக்குச் சென்றனர்.இதன் போது ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்புரவு செய்து கொண்டிருந்த நபர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரை கண்ட நிலையில் ஜே.சி.பி இயந்திரங்களை அங்கேயே கை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இந்த நிலையில் காணியை துப்பரவு செய்ய பயன்படுத்திய 3 ஜே.சி.பி இயந்திரங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement