வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு 12 மணியளவில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த மூவர் அடங்கிய குழுவினர், அங்கு கடமையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு பொலிஸாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர், எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரோடு தர்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர்களில் ஒருவர் அங்கு வேறு கடமையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல் நடத்தினார்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை தடுப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த மற்றைய ஊழியர் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு முச்சக்கர வண்டியில் பொலீசார் வருகை தந்த போது தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்; வவுனியாயாவில் நள்ளிரவில் பதற்றம் வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு 12 மணியளவில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த மூவர் அடங்கிய குழுவினர், அங்கு கடமையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு பொலிஸாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர், எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரோடு தர்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர்களில் ஒருவர் அங்கு வேறு கடமையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல் நடத்தினார்.இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை தடுப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த மற்றைய ஊழியர் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதையடுத்து அங்கு முச்சக்கர வண்டியில் பொலீசார் வருகை தந்த போது தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.