• May 22 2024

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தருணம் ஜனாதிபதி ரணிலின் காலத்தில் ஏற்பட்டுள்ளது- அரவிந்தகுமார்..!samugammedia

Sharmi / Apr 30th 2023, 8:58 pm
image

Advertisement

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தருணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் ஏற்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்த பின்னர் ஏனைய நாடுகளின் நம்பிக்கையினைப்பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளதாகவும் அவர்களினால் தாமாக உதவி வழங்கும் சூழ்நிலையானது ஜனாதிபதியின் நடவடிக்கை காரணமாகவே கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடிக்கு வருகைதந்த இராஜாங்க அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாடு மிக விரைவாகவும் துரிதமாகவும் பழைய நிலைமைக்கு திரும்பிவருகின்றது.அதற்கு வித்திட்டவர் இன்றைய ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க என்றால் அதனை யாரும் மறுக்கமுடியாது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவே நான் வாக்களிப்பேன்.அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் எதிராகவே வாக்களிப்பேன்.

ஐஎம்எப் உதவிகள் வரவேற்ககூடியவையாகவுள்ளது.முதல்கட்டமாக வழங்கிய தொகையானது எமது நாட்டின் தேவைக்கு போதுமானதாகயில்லாத நிலையிலே உள்ளது.இதனை வழங்குவதற்கு அவர்கள் முன்வைத்த நிபந்தனைகள் மிகவும் கடுமையானதாகவேயிருந்தது.

அந்த நிபந்தனைகளை பூர்த்திசெய்தால் மட்டுமே கடனுதவி வழங்கப்படும் என்பதில் ஐஎம்எப் உறுதியாகயிருந்தது.அந்த நிபந்தனைகளை நிறைவுசெய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கடனுதவியைப்பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு முக்கியத்துவமானதாகும்.

சர்வதேச நாடுகளுடன் அவருக்கு இருக்கும் நல்லுறவு,அவரின் அனுபவமே இவற்றினை செய்யக்கூடியதாகயிருந்தது எனவும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தருணம் ஜனாதிபதி ரணிலின் காலத்தில் ஏற்பட்டுள்ளது- அரவிந்தகுமார்.samugammedia இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தருணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் ஏற்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்த பின்னர் ஏனைய நாடுகளின் நம்பிக்கையினைப்பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளதாகவும் அவர்களினால் தாமாக உதவி வழங்கும் சூழ்நிலையானது ஜனாதிபதியின் நடவடிக்கை காரணமாகவே கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.களுவாஞ்சிகுடிக்கு வருகைதந்த இராஜாங்க அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,இந்த நாடு மிக விரைவாகவும் துரிதமாகவும் பழைய நிலைமைக்கு திரும்பிவருகின்றது.அதற்கு வித்திட்டவர் இன்றைய ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க என்றால் அதனை யாரும் மறுக்கமுடியாது.புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவே நான் வாக்களிப்பேன்.அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் எதிராகவே வாக்களிப்பேன்.ஐஎம்எப் உதவிகள் வரவேற்ககூடியவையாகவுள்ளது.முதல்கட்டமாக வழங்கிய தொகையானது எமது நாட்டின் தேவைக்கு போதுமானதாகயில்லாத நிலையிலே உள்ளது.இதனை வழங்குவதற்கு அவர்கள் முன்வைத்த நிபந்தனைகள் மிகவும் கடுமையானதாகவேயிருந்தது.அந்த நிபந்தனைகளை பூர்த்திசெய்தால் மட்டுமே கடனுதவி வழங்கப்படும் என்பதில் ஐஎம்எப் உறுதியாகயிருந்தது.அந்த நிபந்தனைகளை நிறைவுசெய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கடனுதவியைப்பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு முக்கியத்துவமானதாகும்.சர்வதேச நாடுகளுடன் அவருக்கு இருக்கும் நல்லுறவு,அவரின் அனுபவமே இவற்றினை செய்யக்கூடியதாகயிருந்தது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement