• May 03 2024

டிக்டொக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் - சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி..! samugammedia

Chithra / May 15th 2023, 7:00 am
image

Advertisement

டிக்டொக் (Tik Tok) சமூக ஊடக வலையமைப்பில் சட்டவிரோதமாக ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் ஐந்து மோட்டார் சைக்கிள்களுடன் பம்பலப்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கும் வகையில் ஏறக்குறைய 500 மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், 6 ஆம் இலக்க நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் சோதனை நடத்தி சந்தேகத்திற்குரிய இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களின் அமைப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் யார் என்பதை டிக் டாக் சமூக வலைதளங்கள் மூலம் கண்டறிந்து, போக்குவரத்து தவறுக்கு அப்பாற்பட்ட குற்றமாக கருதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் டிக் டாக் மூலம் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 17 முதல் 23 வயதுக்கு இடைப்பட்ட பத்தரமுல்லை, கிரிபத்கொட, பியந்தலை, மொரட்டுவ மற்றும் மடபட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்  எனவும் தெரியவந்துள்ளது.

டிக்டொக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் - சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி. samugammedia டிக்டொக் (Tik Tok) சமூக ஊடக வலையமைப்பில் சட்டவிரோதமாக ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் ஐந்து மோட்டார் சைக்கிள்களுடன் பம்பலப்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கும் வகையில் ஏறக்குறைய 500 மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், 6 ஆம் இலக்க நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் சோதனை நடத்தி சந்தேகத்திற்குரிய இளைஞர்களை கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களின் அமைப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் யார் என்பதை டிக் டாக் சமூக வலைதளங்கள் மூலம் கண்டறிந்து, போக்குவரத்து தவறுக்கு அப்பாற்பட்ட குற்றமாக கருதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் டிக் டாக் மூலம் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 17 முதல் 23 வயதுக்கு இடைப்பட்ட பத்தரமுல்லை, கிரிபத்கொட, பியந்தலை, மொரட்டுவ மற்றும் மடபட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்  எனவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement