• Sep 21 2024

கடற்படை முகாமினால் மக்களிற்கு பயனேதுமில்லை; மாறாக அச்சுறுத்தலே ஏற்படுகின்றது! - தம்பாட்டி கிராம மக்கள் ஐயம்! samugammedia

Chithra / Apr 4th 2023, 12:25 pm
image

Advertisement

கடற்படையானது தம்பாட்டி கிராமத்தில் இருப்பதனால் மக்களுக்கு எந்த வகையான பயனுமில்லை என்பதுடன் மாறாக அவர்களால் அச்சுறுத்தலே ஏற்படுவதாகவும் இருப்பினும் அவற்றை பொருட்படுத்தாது கடற்படை இருப்பதற்கு அனுமதி வழங்கியதாகவும்  நாரத்தனை தம்பாட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

இன்றைய தினம் நாரத்தனை தம்பாட்டி கடற்படையினரிற்கு கிராமத்தில் காணி அளவீடு மற்றும் கடற்படை முகாமிற்கு எதிராக போராட்டத்தினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில், 

நாரந்தனை வடமேற்கு தம்பாட்டி பிரதேசத்திலுள்ள கடற்படை தளத்திற்கான காணியினை வழங்குவதற்காக மக்களிற்கு அறிவிக்காது நில அளவை திணைக்களத்திலிருந்து வருகை தந்துள்ளதாகவும் அது பற்றி எமக்கு அறிவிக்கப்படாத போதிலும் அதனை எதிர்த்து போராட்டத்தினை மேற்கொண்டுள்ளோம் எனவும் கூறியுள்ளனர். 

கடற்படைத்தளமானது மக்களின் குடி பிரதேசத்தில் அமைந்துள்ளதால் அதனை மக்களின் அனுமதியின்றி நில அளவையல் திணைக்கலாமோ அல்லது அரச அதிகாரிகளோ வழங்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

2013 ஆம் ஆண்டளவில் ஒரு வீட்டில் கணவன் தொழிலுக்கு சென்ற வேலை மனைவி தனியாக இருந்தமையை அறிந்த கடற்படை அதிகாரி ஒருவர் வீட்டினுள் புகுந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது. ஊர்மக்களாக திரண்டு அவரிடம் கேள்வி கேட்ட பொழுது தீ பெட்டி வாங்க சென்றதாக கூறியதாக தெரிவித்துள்ளனர்.  

இவ்வாறாக கடற்படையானது தம்பாட்டி கிராமத்தில் இருப்பதனாலும் மக்களுக்கு எந்த வகையான பயனுமில்லை. மாறாக அவர்களால் அச்சுறுத்தலே ஏற்பட்ட போதிலும் அவற்றை பொருட்படுத்தாது இருப்பதற்கு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடற்படை முகாமினால் மக்களிற்கு பயனேதுமில்லை; மாறாக அச்சுறுத்தலே ஏற்படுகின்றது - தம்பாட்டி கிராம மக்கள் ஐயம் samugammedia கடற்படையானது தம்பாட்டி கிராமத்தில் இருப்பதனால் மக்களுக்கு எந்த வகையான பயனுமில்லை என்பதுடன் மாறாக அவர்களால் அச்சுறுத்தலே ஏற்படுவதாகவும் இருப்பினும் அவற்றை பொருட்படுத்தாது கடற்படை இருப்பதற்கு அனுமதி வழங்கியதாகவும்  நாரத்தனை தம்பாட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் நாரத்தனை தம்பாட்டி கடற்படையினரிற்கு கிராமத்தில் காணி அளவீடு மற்றும் கடற்படை முகாமிற்கு எதிராக போராட்டத்தினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில், நாரந்தனை வடமேற்கு தம்பாட்டி பிரதேசத்திலுள்ள கடற்படை தளத்திற்கான காணியினை வழங்குவதற்காக மக்களிற்கு அறிவிக்காது நில அளவை திணைக்களத்திலிருந்து வருகை தந்துள்ளதாகவும் அது பற்றி எமக்கு அறிவிக்கப்படாத போதிலும் அதனை எதிர்த்து போராட்டத்தினை மேற்கொண்டுள்ளோம் எனவும் கூறியுள்ளனர். கடற்படைத்தளமானது மக்களின் குடி பிரதேசத்தில் அமைந்துள்ளதால் அதனை மக்களின் அனுமதியின்றி நில அளவையல் திணைக்கலாமோ அல்லது அரச அதிகாரிகளோ வழங்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டளவில் ஒரு வீட்டில் கணவன் தொழிலுக்கு சென்ற வேலை மனைவி தனியாக இருந்தமையை அறிந்த கடற்படை அதிகாரி ஒருவர் வீட்டினுள் புகுந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது. ஊர்மக்களாக திரண்டு அவரிடம் கேள்வி கேட்ட பொழுது தீ பெட்டி வாங்க சென்றதாக கூறியதாக தெரிவித்துள்ளனர்.  இவ்வாறாக கடற்படையானது தம்பாட்டி கிராமத்தில் இருப்பதனாலும் மக்களுக்கு எந்த வகையான பயனுமில்லை. மாறாக அவர்களால் அச்சுறுத்தலே ஏற்பட்ட போதிலும் அவற்றை பொருட்படுத்தாது இருப்பதற்கு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement