• May 20 2024

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் அபாயகரமானது ; மக்கள் எழுச்சி மூலம் தோற்கடிப்போம் -சுரேந்திரன் வேண்டுகோள் ! samugammedia

Tamil nila / Mar 30th 2023, 5:00 pm
image

Advertisement

புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் மிகவும் அபாயகரமான உள்ள நிலையில் மக்கள் எழுச்சி மூலம் தோற்கடிக்க வேண்டும்  என ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.


இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள  காட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.


 அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை ஐ.நா மற்றும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய நீக்குவதாக கூறிக்கொண்டு அதைவிட கடுமையான மற்றும் கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள்் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.


புதிய பயங்கரவாத தடைச்  சட்டமூலத்தை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம். அதற்கு எமது கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்கிறோம். 


 ஏற்கனவே இருந்த சட்டமூலத்தில் இருக்கும் அனைத்து சரத்துக்களுக்கும் மேலதிகமாக அவசர கால சேவைகளாக கருதப்படும் உணவு உற்பத்தி, விநியோக சேவைகள் என இன்னோரன்ன சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களோ அதைச் சார்ந்த ஊழியர்களோ எந்தவிதமான கருத்து தெரிவிப்பதையோ போராட்டங்களில் ஈடுபடுவதையும் இந்தச் சட்டமூலம் கட்டுப்படுத்துகிறது. 


அவசரகால சட்டத்தின் கீழ் பிரகடனப் படுத்தப்படும் அனைத்து சேவைகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் செயலற்றவர்களாக ஆக்கப்படுகின்ற அபாயகரமான நிலையை இந்த சட்ட மூலம் தோற்றுவிக்கிறது. 


 ஆகவே குறித்த சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் கட்சி பேதம் பாராமல் எழுச்சி கொள்வதோடு அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் அபாயகரமானது ; மக்கள் எழுச்சி மூலம் தோற்கடிப்போம் -சுரேந்திரன் வேண்டுகோள் samugammedia புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் மிகவும் அபாயகரமான உள்ள நிலையில் மக்கள் எழுச்சி மூலம் தோற்கடிக்க வேண்டும்  என ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள  காட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை ஐ.நா மற்றும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய நீக்குவதாக கூறிக்கொண்டு அதைவிட கடுமையான மற்றும் கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள்் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.புதிய பயங்கரவாத தடைச்  சட்டமூலத்தை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம். அதற்கு எமது கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்கிறோம்.  ஏற்கனவே இருந்த சட்டமூலத்தில் இருக்கும் அனைத்து சரத்துக்களுக்கும் மேலதிகமாக அவசர கால சேவைகளாக கருதப்படும் உணவு உற்பத்தி, விநியோக சேவைகள் என இன்னோரன்ன சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களோ அதைச் சார்ந்த ஊழியர்களோ எந்தவிதமான கருத்து தெரிவிப்பதையோ போராட்டங்களில் ஈடுபடுவதையும் இந்தச் சட்டமூலம் கட்டுப்படுத்துகிறது. அவசரகால சட்டத்தின் கீழ் பிரகடனப் படுத்தப்படும் அனைத்து சேவைகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் செயலற்றவர்களாக ஆக்கப்படுகின்ற அபாயகரமான நிலையை இந்த சட்ட மூலம் தோற்றுவிக்கிறது.  ஆகவே குறித்த சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் கட்சி பேதம் பாராமல் எழுச்சி கொள்வதோடு அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement