• Apr 27 2024

கண்டெடுத்த தங்க பொதியை கையளித்த மாமனிதர்!!

crownson / Dec 22nd 2022, 8:39 am
image

Advertisement

மொனராகலை கல்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த K.M லக்மால் தயாரத்ன என்பவர், மொனராகலை சந்தைப் பகுதிக்கு அருகில் (நான்கரை பவுண்) ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியுடைய இரண்டு தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் பதக்கங்கள் அடங்கிய தங்கப் பொதியைக் கண்டெடுத்துள்ளார்.

மொனராகலை நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனமொன்றின் கணக்கியல் பிரிவில் பணிபுரியும் இவர், நேற்று (21) பிற்பகல் நகரிலுள்ள நிறுவனமொன்றுக்கு தனிப்பட்ட தேவைக்காக சென்று கொண்டிருந்த போது, நகரின் கடையொன்றிற்கு அருகில் இந்த தங்கப் பொதி கிடந்துள்ளது.

இதனையடுத்து மொனராகல பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று தலைமையக பிரதான பொலிஸ் அதிகாரி பி.எஸ்.சி.சஞ்சீவவைச் சந்தித்து குறித்த தங்க பொதியை ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறான காலப்பகுதியில் கே.எம்.லக்மால் தயாரத்ன செய்த இந்த நற்செயல் முழு சமூகத்திற்கே முன்னுதாரணமாக அமைவதுடன் உங்களின் இந்த மகத்தான செயலை மனதார பாராட்டுகிறோம் என வாழ்த்துக்களைத் மொனராகலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கண்டெடுத்த தங்க பொதியை கையளித்த மாமனிதர் மொனராகலை கல்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த K.M லக்மால் தயாரத்ன என்பவர், மொனராகலை சந்தைப் பகுதிக்கு அருகில் (நான்கரை பவுண்) ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியுடைய இரண்டு தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் பதக்கங்கள் அடங்கிய தங்கப் பொதியைக் கண்டெடுத்துள்ளார்.மொனராகலை நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனமொன்றின் கணக்கியல் பிரிவில் பணிபுரியும் இவர், நேற்று (21) பிற்பகல் நகரிலுள்ள நிறுவனமொன்றுக்கு தனிப்பட்ட தேவைக்காக சென்று கொண்டிருந்த போது, நகரின் கடையொன்றிற்கு அருகில் இந்த தங்கப் பொதி கிடந்துள்ளது.இதனையடுத்து மொனராகல பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று தலைமையக பிரதான பொலிஸ் அதிகாரி பி.எஸ்.சி.சஞ்சீவவைச் சந்தித்து குறித்த தங்க பொதியை ஒப்படைத்துள்ளார்.இவ்வாறான காலப்பகுதியில் கே.எம்.லக்மால் தயாரத்ன செய்த இந்த நற்செயல் முழு சமூகத்திற்கே முன்னுதாரணமாக அமைவதுடன் உங்களின் இந்த மகத்தான செயலை மனதார பாராட்டுகிறோம் என வாழ்த்துக்களைத் மொனராகலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement