பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நேற்றைய தினம்(01) நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், குறித்த வாக்களிப்பு தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் சங்கானை கல்விக் கோட்டத்தில் அமைக்கப்பெற்றுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு முன்னர் குறித்த ஊடகவியலாளர், வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த, வலிகாமம் கல்வி வலயத்தின் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி கோரியுள்ளார்.
இதன்போது குறித்த அதிகாரி , கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனது புகைப்படத்தை செய்திக்குள் பிரசுரித்து விட்டதாகவும், குறித்த ஊடகவியலாளரை வெளியே செல்லுமாறும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டால் ஊடக சாதனங்கள் பறித்து வெளியே வீசிவிட்டு விரட்டுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.
அதற்கு குறித்த ஊடகவியலாளர், வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியே நின்று செய்தி சேகரிப்பில் ஈடுபடுவது வழமை, அவ்வாறு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று வினவியவேளை, செய்தி சேகரிப்பில் ஈடுபடவோ, வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியே நிற்கவோ கூடாது என்று ஊடகவியலாளரை அச்சுறுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் பிரட்லீ, யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் சி.அமல்ராஜ் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
செய்தி சேகரிப்பின் போது ஊடகவியலாளரை அச்சுறுத்திய அதிகாரி- பல தரப்புகளிடம் முறைப்பாடு. பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நேற்றைய தினம்(01) நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், குறித்த வாக்களிப்பு தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் சங்கானை கல்விக் கோட்டத்தில் அமைக்கப்பெற்றுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றிருந்தார்.அங்கு சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு முன்னர் குறித்த ஊடகவியலாளர், வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த, வலிகாமம் கல்வி வலயத்தின் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி கோரியுள்ளார்.இதன்போது குறித்த அதிகாரி , கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனது புகைப்படத்தை செய்திக்குள் பிரசுரித்து விட்டதாகவும், குறித்த ஊடகவியலாளரை வெளியே செல்லுமாறும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டால் ஊடக சாதனங்கள் பறித்து வெளியே வீசிவிட்டு விரட்டுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.அதற்கு குறித்த ஊடகவியலாளர், வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியே நின்று செய்தி சேகரிப்பில் ஈடுபடுவது வழமை, அவ்வாறு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று வினவியவேளை, செய்தி சேகரிப்பில் ஈடுபடவோ, வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியே நிற்கவோ கூடாது என்று ஊடகவியலாளரை அச்சுறுத்தியுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் பிரட்லீ, யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் சி.அமல்ராஜ் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.