தமிழ்நாடு மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சதீவை மீட்பதே ஒரே வழி என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூரில் புதிய சூரை மீன்பிடி துறைமுக திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மு.க ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளில் இடம்பெற்ற 97 கைது நடவடிக்கைகளில் 185 படகுகளும் 1,383 தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மீனவர்களை மீட்க வலியுறுத்தி இந்திய மத்திய அரசுக்கு இதுவரை 76 கடிதங்களை எழுதியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி- முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்து. தமிழ்நாடு மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சதீவை மீட்பதே ஒரே வழி என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருவொற்றியூரில் புதிய சூரை மீன்பிடி துறைமுக திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மு.க ஸ்டாலின் இதனை தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் இடம்பெற்ற 97 கைது நடவடிக்கைகளில் 185 படகுகளும் 1,383 தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.அத்துடன் மீனவர்களை மீட்க வலியுறுத்தி இந்திய மத்திய அரசுக்கு இதுவரை 76 கடிதங்களை எழுதியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.