எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் நடந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் ஒருவர்.
விபத்துக்கு முன்னர் அவர் ஏதேனும் போதைப் பொருட்களை உட்கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், காயமடைந்தவர்களில் 11 பேர் இன்னும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
எல்ல - வெல்லவாயவில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் நடந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 4 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர்.விபத்தில் உயிரிழந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் ஒருவர்.விபத்துக்கு முன்னர் அவர் ஏதேனும் போதைப் பொருட்களை உட்கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், காயமடைந்தவர்களில் 11 பேர் இன்னும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.