• Apr 23 2024

சுற்றுலா பயணிகளை ஏமாற்றினால் அபராதம் அதிகம்! அமைச்சர் அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Mar 28th 2023, 4:00 pm
image

Advertisement

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிவில் பாதுகாப்புக் குழுக்களை ஈடுபடுத்துமாறும், அத்தகைய முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகளைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான சாளரத்தை உருவாக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

லக்கேஜ் தூக்குபவர்கள், டாக்சி டிரைவர்கள் மற்றும் புரோக்கர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அடிக்கடி எழுந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளை ஏமாற்றினால் அபராதம் அதிகம் அமைச்சர் அதிரடி அறிவிப்பு samugammedia கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிவில் பாதுகாப்புக் குழுக்களை ஈடுபடுத்துமாறும், அத்தகைய முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகளைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான சாளரத்தை உருவாக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.லக்கேஜ் தூக்குபவர்கள், டாக்சி டிரைவர்கள் மற்றும் புரோக்கர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அடிக்கடி எழுந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement