• May 19 2024

இலங்கை மக்களே அவதானம்..! பாரிய வெள்ளப்பெருக்கு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! samugammedia

Chithra / Nov 20th 2023, 7:44 am
image

Advertisement

 

மஹா ஓயா ஆற்றின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் பல பிரதேச செயலகப் பிரிவுகள் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மஹா ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், தெதுறு ஓயா, தப்போவ, வெஹரலகல, லுனுகம்வெஹர, மவ்வார மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பொகவந்தலாவ மஹாஎலிய வனப்பகுதி மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கெசல்கமுஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பொகவந்தலாவ பிரதேசத்தில் பல தாழ்வான நிலங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் அப்பகுதி மக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கேகாலை, கலிகமுவ மற்றும் அரநாயக்க ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையுடன் மண்சரிவு அபாயம் காரணமாக புனித ஜோசப் கனிஷ்ட பெண்கள் கல்லூரி மற்றும் புனித மரியாள் தமிழ் கல்லூரி இன்று (20) மூடப்படும் என கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (19ம் திகதி) இரவு, பலான பிரதேசத்தில் இருந்து புகையிரத பாதையில் பாறை சரிந்து விழுந்ததன் காரணமாக, மலையக புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதம் மீண்டும் தடைப்பட்டுள்ளது.

அத்துடன் கலகெதர பிரதேசத்தில் இருந்து கண்டி குருநாகல் பிரதான வீதிக்கு மண்மேடு ஒன்று வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக கலகெதர 10 கால்வாய்க்கு அருகில் உள்ள வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று (20.11.2023) சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

மேலும், நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.

இலங்கை மக்களே அவதானம். பாரிய வெள்ளப்பெருக்கு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. samugammedia  மஹா ஓயா ஆற்றின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் பல பிரதேச செயலகப் பிரிவுகள் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.இதன்படி, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மஹா ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும், தெதுறு ஓயா, தப்போவ, வெஹரலகல, லுனுகம்வெஹர, மவ்வார மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், பொகவந்தலாவ மஹாஎலிய வனப்பகுதி மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கெசல்கமுஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பொகவந்தலாவ பிரதேசத்தில் பல தாழ்வான நிலங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பில் அப்பகுதி மக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, கேகாலை, கலிகமுவ மற்றும் அரநாயக்க ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலையுடன் மண்சரிவு அபாயம் காரணமாக புனித ஜோசப் கனிஷ்ட பெண்கள் கல்லூரி மற்றும் புனித மரியாள் தமிழ் கல்லூரி இன்று (20) மூடப்படும் என கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.நேற்று (19ம் திகதி) இரவு, பலான பிரதேசத்தில் இருந்து புகையிரத பாதையில் பாறை சரிந்து விழுந்ததன் காரணமாக, மலையக புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதம் மீண்டும் தடைப்பட்டுள்ளது.அத்துடன் கலகெதர பிரதேசத்தில் இருந்து கண்டி குருநாகல் பிரதான வீதிக்கு மண்மேடு ஒன்று வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக கலகெதர 10 கால்வாய்க்கு அருகில் உள்ள வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று (20.11.2023) சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுமேலும், நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement