• May 17 2024

பெரு நாட்டில் தீவிரமடைந்த மக்கள் போராட்டம்; மூடப்பட்ட உலக அதிசயம்!

Chithra / Jan 23rd 2023, 9:47 am
image

Advertisement

தென் அமெரிக்க நாடான பெருவில் மக்கள் போராட்டம் உச்ச அடைந்துள்ளது. அந்நாட்டில் சில மாதங்களாகவே அரசியல் குழப்பம் ஓயாது நிலவி வருகிறது. 

அதன் விளைவாக 2022 டிசம்பரில் அங்கு ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதியாக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ, பாராளுமன்றத்தை கலைத்து அவசர நிலையை அறிவிக்க திட்டமிட்டார்.

அதற்குள்ளாகவே அவரை பாராளுமன்றம் பதவியை விட்டு நீக்கியது. துணை ஜனாதிபதியாக இருந்த டினா பொலுவார்டேஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். பெரு நாட்டின் முதல் பெண் அதிபர்ஜனாதிபதி ஆவார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதிய பெட்ரோ மெக்சிகோ நாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவரை பெரு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்நிலையில், டினா பதவியேற்றதற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், பெட்ரோவை விடுதலை செய்யவும் அவரது ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி வன்முறை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு அவசர நிலை அறிவித்தது.

காவல்துறையை வைத்து போராட்டத்தை ஒடுக்க பெரும் முயற்சியில் பெரு அரசு களமிறங்கியுள்ளது. இருப்பினும் போராட்டத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதன் எதிரொலியாக பெருவில் உள்ள உலக அதிசயமான மச்சு பிச்சுவை மூடி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 15ஆம் நூற்றாண்டு இன்கா பேரரசால் எழில் கொஞ்சும் மலை மீது கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரம் மச்சு பிச்சு. 

யுனேஸ்கோவல் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மச்சு பிச்சுவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்போது மச்சுபிச்சுவை பெரு அரசு மூடியுள்ள நிலையில், அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் சிக்கியுள்ளனர். தங்களை பத்திரமாக மீட்டு சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என பெரு சுற்றுலா அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

கடந்த ஒரு மாத கால போராட்டத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இராஜினாமா செய்ய வாய்ப்பே இல்லை ஜனாதிபதி டினா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெரு நாட்டில் தீவிரமடைந்த மக்கள் போராட்டம்; மூடப்பட்ட உலக அதிசயம் தென் அமெரிக்க நாடான பெருவில் மக்கள் போராட்டம் உச்ச அடைந்துள்ளது. அந்நாட்டில் சில மாதங்களாகவே அரசியல் குழப்பம் ஓயாது நிலவி வருகிறது. அதன் விளைவாக 2022 டிசம்பரில் அங்கு ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதியாக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ, பாராளுமன்றத்தை கலைத்து அவசர நிலையை அறிவிக்க திட்டமிட்டார்.அதற்குள்ளாகவே அவரை பாராளுமன்றம் பதவியை விட்டு நீக்கியது. துணை ஜனாதிபதியாக இருந்த டினா பொலுவார்டேஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். பெரு நாட்டின் முதல் பெண் அதிபர்ஜனாதிபதி ஆவார்.பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதிய பெட்ரோ மெக்சிகோ நாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவரை பெரு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.இந்நிலையில், டினா பதவியேற்றதற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், பெட்ரோவை விடுதலை செய்யவும் அவரது ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி வன்முறை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு அவசர நிலை அறிவித்தது.காவல்துறையை வைத்து போராட்டத்தை ஒடுக்க பெரும் முயற்சியில் பெரு அரசு களமிறங்கியுள்ளது. இருப்பினும் போராட்டத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.இதன் எதிரொலியாக பெருவில் உள்ள உலக அதிசயமான மச்சு பிச்சுவை மூடி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 15ஆம் நூற்றாண்டு இன்கா பேரரசால் எழில் கொஞ்சும் மலை மீது கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரம் மச்சு பிச்சு. யுனேஸ்கோவல் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மச்சு பிச்சுவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.தற்போது மச்சுபிச்சுவை பெரு அரசு மூடியுள்ள நிலையில், அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் சிக்கியுள்ளனர். தங்களை பத்திரமாக மீட்டு சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என பெரு சுற்றுலா அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஒரு மாத கால போராட்டத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இராஜினாமா செய்ய வாய்ப்பே இல்லை ஜனாதிபதி டினா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement