• Nov 22 2024

காணமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட வேண்டும்! வலியுறுத்தும் அமைப்பு

Chithra / Oct 3rd 2024, 9:13 am
image


காணமலாக்கப்பட்டோரின்  உறவுகளின் சொந்தங்களைத் தேடி பல வருடங்களைத் தாண்டிய ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை தவறாக விமர்சித்த, அநுர குமார திசாநாயக்காவின் ஆள் எனக் கூறி அச்சுறுத்திய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நியாயமான காரணங்களுக்காக ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை நடாத்தும் வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது காடையர்களை ஏவி விட்டு தமிழ் மக்களை மிரட்ட முனையும் ஜே.வி.பியினரினது ஆதரவில் முன்னெடுக்கப்படும்  இலங்கையின் தேசியப் புலனாய்வளர்களின் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை "அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு " வன்மையாக கண்டிப்பதோடு,

 அடக்கு முறைகளை  இலங்கை அரசும், ஜே.வி.பி கட்சியினரும் தொடர முனையும் பட்சத்தில் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தனது ஆதரவாளர்களுடன் காணமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களோடு தன்னையும் இணைத்துக் கொள்ளும் என்பதைக் கூறி வைக்க விரும்புகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

காணமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட வேண்டும் வலியுறுத்தும் அமைப்பு காணமலாக்கப்பட்டோரின்  உறவுகளின் சொந்தங்களைத் தேடி பல வருடங்களைத் தாண்டிய ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை தவறாக விமர்சித்த, அநுர குமார திசாநாயக்காவின் ஆள் எனக் கூறி அச்சுறுத்திய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தெரிவித்துள்ளது.அந்த அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,நியாயமான காரணங்களுக்காக ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை நடாத்தும் வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது காடையர்களை ஏவி விட்டு தமிழ் மக்களை மிரட்ட முனையும் ஜே.வி.பியினரினது ஆதரவில் முன்னெடுக்கப்படும்  இலங்கையின் தேசியப் புலனாய்வளர்களின் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.இப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை "அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு " வன்மையாக கண்டிப்பதோடு, அடக்கு முறைகளை  இலங்கை அரசும், ஜே.வி.பி கட்சியினரும் தொடர முனையும் பட்சத்தில் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தனது ஆதரவாளர்களுடன் காணமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களோடு தன்னையும் இணைத்துக் கொள்ளும் என்பதைக் கூறி வைக்க விரும்புகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement