• Sep 20 2024

குமுழமுனையில் வயல் வேலிக்கு தீவைத்த விஷமிகள்!SamugamMedia

Sharmi / Feb 17th 2023, 11:54 am
image

Advertisement

முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் வயல் வேலிக்கு தீமூட்டி விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு - குமுழமுனை - தாமரைக்கேணி பகுதியில் உள்ள வயல் காணிக்கு அமைக்கப்பட்ட வேலிக்கு தீமூட்டி  நேற்று இரவு விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக வயல் நிலத்தின் உரிமையாளரினால் செம்மலைப் பகுதியிலுள்ள பொலிஸ் காவலரணில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியரான வேலுப்பிள்ளை இரத்தினசபாபதி என்பவருடைய குறித்த வயல் நிலத்தினை அறுவடை செய்யத் தயாராக இருந்த நிலையிலேயே இவ்வாறான விஷமத்தனமாக செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுவேலைத்திட்டங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதால் இவ்வாறாக பழிவாங்கப்பட்டுள்ளதாகவும், 10 வருடங்களாக குறித்த நிலத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் இப்படியான விசமத்தனமான நடவடிக்கைகள் இதுவரை நடைபெற்றதில்லையெனவும் முறைப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குமுழமுனையில் வயல் வேலிக்கு தீவைத்த விஷமிகள்SamugamMedia முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் வயல் வேலிக்கு தீமூட்டி விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - குமுழமுனை - தாமரைக்கேணி பகுதியில் உள்ள வயல் காணிக்கு அமைக்கப்பட்ட வேலிக்கு தீமூட்டி  நேற்று இரவு விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக வயல் நிலத்தின் உரிமையாளரினால் செம்மலைப் பகுதியிலுள்ள பொலிஸ் காவலரணில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியரான வேலுப்பிள்ளை இரத்தினசபாபதி என்பவருடைய குறித்த வயல் நிலத்தினை அறுவடை செய்யத் தயாராக இருந்த நிலையிலேயே இவ்வாறான விஷமத்தனமாக செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொதுவேலைத்திட்டங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதால் இவ்வாறாக பழிவாங்கப்பட்டுள்ளதாகவும், 10 வருடங்களாக குறித்த நிலத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் இப்படியான விசமத்தனமான நடவடிக்கைகள் இதுவரை நடைபெற்றதில்லையெனவும் முறைப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement