• Jan 31 2025

மறைந்த மாவை சேனாதிராஜாவின் அரசியல் பயணங்களும் வாழ்க்கை சுருக்கமும்..!

Sharmi / Jan 30th 2025, 10:51 am
image

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை.சேனாதிராஜா என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா 83 வயதில் நேற்றையதினம் இரவு 10 மணியளவில் காலமானார். 

 மாவை சேனாதிராஜா ஐயா, தனது 19 வயதில் தொடங்கிய அரசியல் பயணத்தை 83 வயதுவரை இடையறாது தொடர்ந்த முழுநேர அரசியல்தலைவராக அவர் திகழ்ந்திருந்தார். 

இலங்கை தமிழரசுக் கட்சியின் தொண்டனாக ஆரம்பித்து தலைவராக தெரிவாகிய ஒரே அரசியல்வாதியும்  மாவை.சேனாதிராஜாவே காணப்படுகிறார்.

1969 - 1983 வரையான எனக்கு முன்னைய காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசுகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக அரசியல் களங்களில் போராடி சிறைகளில் அடைக்கப்பட்டும் மௌனிக்காத அவரது குரல், 80களில் இளைஞர்களின் அரசியல் பாதைக்கு வலுச்சேர்த்திருந்தது.

அமரர் மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. அவரின் சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராஜா எனஅழைக்கப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்தார்.

வீமன்காமம் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், நடேஸ்வராக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் அவர் கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இந்நிலையில், இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயற்பட்டு 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.

1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

1969 முதல் 1983 வரையான காலப் பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மகசீன் சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.

1977 இல் மாவை சேனாதிராஜா மணமகளாக தமது உறவு முறை பவானி என்பவரைத் திருமணம் முடித்தார்.

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.என்.டி.எல்.எவ்., ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத் தில் போட்டியிட்டபோதும் அதில் தெரிவாகவில்லை.

அதன் பின்னர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13இல் கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டமையை அடுத்து அவரின் இடத்துக்கு மாவை சேனாதிராஜா தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

அந்தத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூடுதலாக அம்பாறைக்கே அவர் பயன்படுத்தினார்.

பலருக்கு அம்பாறை மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகள், துறைமுக அதிகாரசபை நியம னங்களை பெற்றுக்கொடுத்தமையுடன் பன்முகப்படுத்தப்பட் நிதியை அம்பாறை மாவட்டத் தமிழ் கிராமங்களுக்கே அவர் ஒதுக்கியும் இருந்தார். பெரியநீலாவணை வைத்தியசாலை இவருடைய பன்முகப் படுத்தக்பட்ம நிதி மூலம் கட்டடம் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

1994 தேர்தலில் அம்பாறை மாவட் டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி மூல மாகத் தேர்தலில் போட்டியிட்டபோதும் அவர் தெரிவாகவில்லை.

1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

2001 ஒக்டோபர் 20 இல் தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நிறுவிய பின்னர் 2001 தேர்தலில் யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் விடுதலை கூட்டணி 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14 பேர் விடுதலைப்புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதியாக ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாடாளுமன்றக் குழு கூட்ட எடுத்தபோது – ஆனந்தசங்கரி அதை ஏற்கமுடியாது என முட்டுக்கட்டை போட்ட போது – மாவை விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதன்பின்னர் 2004, 2010, 2015, தேர்தல்களில் மீண்டும் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

2020 தேர்தலில் போட்டியிட்டும் 29 ஆயிரத்து 358 வாக்குகளைப் பெற்றும் அவர் தெரிவாகவில்லை.

தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளராக 2004 தொடக்கம் 2014 வரையும் பதவி வகித்தார். பின்னர் வவுனியாவில் 2014 யில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

2024 பொதுத்தேர்தலின் போது கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுகின்றார் என அறிவித்தார்.

அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் கடந்த 2014 செப்டம்பர்07 தொடக்கம் 2024, டிசம்பர் 28 வரையும் ஏறக்குறைய 10 வருடங்கள் தலைவராகவும், அதற்கு முன்னர் 2004 தொடக்கம் 2014 வரை 10 வருடங்கள் பொதுச்செயலாளராகவும் அவர் பதவியில் இருந்துள்ளார்.

இவ்வாறு தமிழ் தேசத்தின் விடிவுக்காக அயராது குரல் கொடுத்த மாவை சேனாதிராஜா, தமிழ் சமூகத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் இலங்கை அரசியலுக்கான அவரது ஆழமான பங்களிப்பும் மிகுந்த மரியாதையுடனும் நினைவு கூரப்படும்.





மறைந்த மாவை சேனாதிராஜாவின் அரசியல் பயணங்களும் வாழ்க்கை சுருக்கமும். இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை.சேனாதிராஜா என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா 83 வயதில் நேற்றையதினம் இரவு 10 மணியளவில் காலமானார்.  மாவை சேனாதிராஜா ஐயா, தனது 19 வயதில் தொடங்கிய அரசியல் பயணத்தை 83 வயதுவரை இடையறாது தொடர்ந்த முழுநேர அரசியல்தலைவராக அவர் திகழ்ந்திருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தொண்டனாக ஆரம்பித்து தலைவராக தெரிவாகிய ஒரே அரசியல்வாதியும்  மாவை.சேனாதிராஜாவே காணப்படுகிறார்.1969 - 1983 வரையான எனக்கு முன்னைய காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசுகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக அரசியல் களங்களில் போராடி சிறைகளில் அடைக்கப்பட்டும் மௌனிக்காத அவரது குரல், 80களில் இளைஞர்களின் அரசியல் பாதைக்கு வலுச்சேர்த்திருந்தது.அமரர் மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. அவரின் சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராஜா எனஅழைக்கப்பட்டார்.அவர் யாழ்ப்பாணம் மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்தார்.வீமன்காமம் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், நடேஸ்வராக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் அவர் கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.இந்நிலையில், இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயற்பட்டு 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.1969 முதல் 1983 வரையான காலப் பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மகசீன் சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.1977 இல் மாவை சேனாதிராஜா மணமகளாக தமது உறவு முறை பவானி என்பவரைத் திருமணம் முடித்தார்.1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.என்.டி.எல்.எவ்., ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத் தில் போட்டியிட்டபோதும் அதில் தெரிவாகவில்லை.அதன் பின்னர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13இல் கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டமையை அடுத்து அவரின் இடத்துக்கு மாவை சேனாதிராஜா தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.அந்தத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூடுதலாக அம்பாறைக்கே அவர் பயன்படுத்தினார்.பலருக்கு அம்பாறை மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகள், துறைமுக அதிகாரசபை நியம னங்களை பெற்றுக்கொடுத்தமையுடன் பன்முகப்படுத்தப்பட் நிதியை அம்பாறை மாவட்டத் தமிழ் கிராமங்களுக்கே அவர் ஒதுக்கியும் இருந்தார். பெரியநீலாவணை வைத்தியசாலை இவருடைய பன்முகப் படுத்தக்பட்ம நிதி மூலம் கட்டடம் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.1994 தேர்தலில் அம்பாறை மாவட் டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி மூல மாகத் தேர்தலில் போட்டியிட்டபோதும் அவர் தெரிவாகவில்லை.1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.2001 ஒக்டோபர் 20 இல் தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நிறுவிய பின்னர் 2001 தேர்தலில் யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் விடுதலை கூட்டணி 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14 பேர் விடுதலைப்புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதியாக ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாடாளுமன்றக் குழு கூட்ட எடுத்தபோது – ஆனந்தசங்கரி அதை ஏற்கமுடியாது என முட்டுக்கட்டை போட்ட போது – மாவை விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.அதன்பின்னர் 2004, 2010, 2015, தேர்தல்களில் மீண்டும் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.2020 தேர்தலில் போட்டியிட்டும் 29 ஆயிரத்து 358 வாக்குகளைப் பெற்றும் அவர் தெரிவாகவில்லை.தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளராக 2004 தொடக்கம் 2014 வரையும் பதவி வகித்தார். பின்னர் வவுனியாவில் 2014 யில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.2024 பொதுத்தேர்தலின் போது கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுகின்றார் என அறிவித்தார்.அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் கடந்த 2014 செப்டம்பர்07 தொடக்கம் 2024, டிசம்பர் 28 வரையும் ஏறக்குறைய 10 வருடங்கள் தலைவராகவும், அதற்கு முன்னர் 2004 தொடக்கம் 2014 வரை 10 வருடங்கள் பொதுச்செயலாளராகவும் அவர் பதவியில் இருந்துள்ளார்.இவ்வாறு தமிழ் தேசத்தின் விடிவுக்காக அயராது குரல் கொடுத்த மாவை சேனாதிராஜா, தமிழ் சமூகத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் இலங்கை அரசியலுக்கான அவரது ஆழமான பங்களிப்பும் மிகுந்த மரியாதையுடனும் நினைவு கூரப்படும்.

Advertisement

Advertisement

Advertisement