• Oct 02 2024

அரசியலமைப்பில் மாற்றம் - ஆளும் கட்சிக்கு அறிவித்த ஜனாதிபதி? samugammedia

Chithra / Mar 27th 2023, 7:10 pm
image

Advertisement

அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக விசேட நபர் ஒருவரின் ஊடாக ஜனாதிபதி, ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி 4 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த முடியும்.

எவ்வாறாயினும் பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவருக்கு தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.

இந்தநிலையில் பதில் ஜனாதிபதி ஒருவர்; நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிடும் வகையில் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்.

அதற்கு தேவையான சட்ட விதிமுறைகளை அமைப்பதே குறித்த அரசியலமைப்பு திருத்தத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பில் அவ்வாறான திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த 2025ஆம் ஆண்டு வரை காத்திருக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பில் மாற்றம் - ஆளும் கட்சிக்கு அறிவித்த ஜனாதிபதி samugammedia அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக விசேட நபர் ஒருவரின் ஊடாக ஜனாதிபதி, ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி 4 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த முடியும்.எவ்வாறாயினும் பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவருக்கு தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.இந்தநிலையில் பதில் ஜனாதிபதி ஒருவர்; நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிடும் வகையில் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்.அதற்கு தேவையான சட்ட விதிமுறைகளை அமைப்பதே குறித்த அரசியலமைப்பு திருத்தத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.அரசியலமைப்பில் அவ்வாறான திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த 2025ஆம் ஆண்டு வரை காத்திருக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement