• May 02 2024

மேலும் குறையவுள்ள முட்டை விலை..! samugammedia

Egg
Chithra / May 10th 2023, 9:01 am
image

Advertisement

முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட வெள்ளை மற்றும் சிவப்பு முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, அதிக விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை முட்டை 40 ரூபாயாகவும், சிவப்பு முட்டை 41 ரூபாயாகவும் மொத்த விலையில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளை முட்டை ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 44 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 46 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகார சபையினால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இம்மாத இறுதிக்குள் முட்டை விலை மேலும் குறையும் எனவும், முட்டையின் கட்டுப்பாட்டு விலை என்னவாகும் என நினைத்துப் பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், பேக்கரிகள், ஹோட்டல்கள் மற்றும் மளிகைக் கடைகளுக்கு உள்ளூர் முட்டைகளை தேவையான அளவு கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் குறையவுள்ள முட்டை விலை. samugammedia முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட வெள்ளை மற்றும் சிவப்பு முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதன்படி, அதிக விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.வெள்ளை முட்டை 40 ரூபாயாகவும், சிவப்பு முட்டை 41 ரூபாயாகவும் மொத்த விலையில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளை முட்டை ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 44 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 46 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகார சபையினால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இம்மாத இறுதிக்குள் முட்டை விலை மேலும் குறையும் எனவும், முட்டையின் கட்டுப்பாட்டு விலை என்னவாகும் என நினைத்துப் பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், பேக்கரிகள், ஹோட்டல்கள் மற்றும் மளிகைக் கடைகளுக்கு உள்ளூர் முட்டைகளை தேவையான அளவு கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement