• May 19 2024

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிவிட்டு ஊர் ஊராக சபதம் பாடும் ராஜபக்சர்கள்..! இரான் விக்கிரமரத்ன காட்டம்..!samugammedia

Sharmi / Jun 20th 2023, 12:10 pm
image

Advertisement

நாட்டை வங்கிரோத்து நிலைக்கு கொண்டு சென்று விட்டு ராஜபக்சர்கள் இன்றி ஊரூராக இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப போவதாக சபதம் எடுக்கின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்  இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்கள் நாடு அதளபாதாளத்திற்கு சென்றமைக்கு காரணம் ராஜபக்ச குடும்பத்தினர். இவர்களுக்கு சார்பாகவும் ஒரு குழு இருக்கின்றது.

அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போர வெவவில் குளித்துவிட்டு மாளிகையில் மறைந்திருந்தவர்கள் இவ்வாறு கிராமங்களுக்கு செல்ல முடியும்.

அவ்வாறு கிராமங்களுக்கு சென்று ரணில் விக்கிரமசிங்கவை முன்னிலைப்படுத்திக்கொண்டு ஐ.எம்.எப்பிற்கு மறைந்துகொண்டு , இனவாத மதவாதத்தை பரப்பிக்கொண்டு தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகின்றனர்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சவின் பதாதைகளை ஏந்திக்கொண்டு இன்று அமைச்சுப்பதவிகளை வேண்டுகின்றனர். 2022 ஆம் ஆண்டு இந்த நாடு பாரிய இன்னல்களை சந்தித்தது என தெரிவித்துள்ளார்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிவிட்டு ஊர் ஊராக சபதம் பாடும் ராஜபக்சர்கள். இரான் விக்கிரமரத்ன காட்டம்.samugammedia நாட்டை வங்கிரோத்து நிலைக்கு கொண்டு சென்று விட்டு ராஜபக்சர்கள் இன்றி ஊரூராக இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப போவதாக சபதம் எடுக்கின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்  இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்கள் நாடு அதளபாதாளத்திற்கு சென்றமைக்கு காரணம் ராஜபக்ச குடும்பத்தினர். இவர்களுக்கு சார்பாகவும் ஒரு குழு இருக்கின்றது.அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போர வெவவில் குளித்துவிட்டு மாளிகையில் மறைந்திருந்தவர்கள் இவ்வாறு கிராமங்களுக்கு செல்ல முடியும்.அவ்வாறு கிராமங்களுக்கு சென்று ரணில் விக்கிரமசிங்கவை முன்னிலைப்படுத்திக்கொண்டு ஐ.எம்.எப்பிற்கு மறைந்துகொண்டு , இனவாத மதவாதத்தை பரப்பிக்கொண்டு தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகின்றனர்.இந்நிலையில் மகிந்த ராஜபக்சவின் பதாதைகளை ஏந்திக்கொண்டு இன்று அமைச்சுப்பதவிகளை வேண்டுகின்றனர். 2022 ஆம் ஆண்டு இந்த நாடு பாரிய இன்னல்களை சந்தித்தது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement