• May 19 2024

சஜித் கருத்துடன் 100 வீதம் உடன்படுகின்றேன்..! சபையில் ஆச்சரியமடைந்த எம்.பிக்கள்.! samugammedia

Sharmi / Jun 20th 2023, 12:05 pm
image

Advertisement

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த விடயத்துடன் 100 வீதம் தான் உடன்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சஜித் பிரேமதாசவினால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை ஒன்றிற்கு கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் டெங்குநோய் தொற்றினை ஒழிப்பிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்துமாறு சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

டெங்கு மீண்டும் ஒரு தீவிர தொற்றுநோயாக மாறியுள்ளதாகவும், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக இவர்களின் வேலைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமெனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் வழங்கியிருந்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, எதிர்க்கட்சித் தலைவருடன் நான் 100வீதம் உடன்படுகிறேன். இவர்கள் 2016ஆம் அண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு எந்த அடிப்படைத் தகுதி எதுவும் இல்லை. ஆனால், தற்போது எட்டு ஆண்டுகளாக இதில் பணியாற்றியுள்ளனர்.தொழிலாளர்களுக்கு வேலை வழங்கினால் அவர்களும் அதனை உறுதி செய்யப்பட வேண்டும்

எனவே இதற்காக மூன்று அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த பணியாளர்கள் ஒரு நாளைக்கு எழுநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் இந்த பணியில் தொடர்ந்து இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனவே இதனை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

சஜித் கருத்துடன் 100 வீதம் உடன்படுகின்றேன். சபையில் ஆச்சரியமடைந்த எம்.பிக்கள். samugammedia எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த விடயத்துடன் 100 வீதம் தான் உடன்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சஜித் பிரேமதாசவினால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை ஒன்றிற்கு கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.நாட்டில் டெங்குநோய் தொற்றினை ஒழிப்பிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்துமாறு சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.டெங்கு மீண்டும் ஒரு தீவிர தொற்றுநோயாக மாறியுள்ளதாகவும், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக இவர்களின் வேலைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமெனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு பதில் வழங்கியிருந்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, எதிர்க்கட்சித் தலைவருடன் நான் 100வீதம் உடன்படுகிறேன். இவர்கள் 2016ஆம் அண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எந்த அடிப்படைத் தகுதி எதுவும் இல்லை. ஆனால், தற்போது எட்டு ஆண்டுகளாக இதில் பணியாற்றியுள்ளனர்.தொழிலாளர்களுக்கு வேலை வழங்கினால் அவர்களும் அதனை உறுதி செய்யப்பட வேண்டும் எனவே இதற்காக மூன்று அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த பணியாளர்கள் ஒரு நாளைக்கு எழுநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் இந்த பணியில் தொடர்ந்து இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனவே இதனை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement