• May 19 2024

முள்ளிவாய்க்காலில் சிங்களம் அடைந்த வெற்றி இராணுவ வெற்றி அல்ல; இன அழிப்பின் வெற்றி!!! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் samugammedia

Chithra / May 18th 2023, 11:43 am
image

Advertisement

நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய பெரும் தமிழினவழிப்பின் நினைவுகளை, அறச்சீற்றத்துடன் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றாய்க்கூடி நினைவுகூரும் நாள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் தெரிவித்தார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

இற்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர், 2009 ஆம் ஆண்டு மே மாதம் சிங்கள இனவாதப்பூதம் தமிழீழ தேசம் மீது நடாத்திய இனவழிப்பு வெறியாட்டத்தின் நினைவு நாள்.

நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய பெரும் தமிழினவழிப்பின் நினைவுகளை, அறச்சீற்றத்துடன் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றாய்க்கூடி நினைவுகூரும் நாள்.

நமது மக்கள் கொத்துக் கொத்தாய் சிங்களத்தின் இனவழிப்பில் கொல்லப்பட்டமை நமது தேசத்தில் ஏற்படுத்திய பெருந்துயரை நாம் தமிழீழத் தேசிய துக்கநாளாய் அனுட்டிக்கும் நாள்.

சிறிலங்கா அரசு தமிழினவழிப்பினூடு நம் தேசத்தில் ஏற்படுத்திய பெருந்துயர் ஓர் ஆறாத வடுவாக தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களம் அடைந்தது யுத்தத்தை வெற்றி கொண்ட ஓர் இராணுவ வெற்றி அல்ல. உணவுத்தடை, மருந்துத்தடை, இடைவிடாத குண்டு வீச்சுகள் காரணமாக மக்களை பராமரிக்கும் சுமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தோள்கள் மீது சுமத்தப்பட்டது. 

கஞ்சிக் கொட்டில்கள் அமைத்தும், 24 மணி நேர மருந்துக் கொட்டகைகள் அமைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் “யுத்தகளத்தில் போராடுவதற்கு இருக்கும் வீரத்தை விடவும், யுத்தத்தால் ஏற்படும் சுமையை தாங்குவதற்கான வீரம் பெரிதாக இருக்க வேண்டும்.” என்ற சன் டுஸ் (Sun Tzu) இன் வாசகங்களிற்கு இலக்கணமாக செயற்பட்டார்கள். 

இச் சுமை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலுவில் எதிர்த் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே சிங்களம் வெற்றி கொண்டது. இது ஓர் இனவழிப்பு. எந்தவித அறமுமின்றி இனவழிப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆக்கிரமிப்பு.

முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசு எழுப்பிய வெற்றி முழக்கும் ஓர் இனவழிப்பு வெற்றி முழக்கம். ஆக்கிரமிப்பு வெற்றி முழக்கம். இது குறித்து உணமையில் சிங்கள மக்கள் வெட்கித் தலைகுனிந்திருக்க வேண்டும்.

இத் தமிழினவழிப்புக் குற்றவாளிகள் அனைத்துலகச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சிறிலங்கா அரசுதான் இனவழிப்பின் முதற் குற்றவாளி என்பதுவும் நிலைநிறத்தப்பட வேண்டியது.

தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்காக மட்டுமல்ல, உலகின் ஏனைய நாடுகளில் இனவழிப்பில் ஈடுபடக்கூடிய கொடிய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்காகவும் தமிழினவழிப்புக் குற்றவாளிகள் அனைத்துலக நீதிப்பொறிமுறையின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள்.

தமிழினவழிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கபடும் நிலையை ஏற்படுத்தவதற்காக நாம் தொடர்ச்சியாகப் போராட வேண்டியுள்ளது.

நீதி, அனைத்துலக உறவுகளாலும், நலன்களாலும அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அவலநிலைக்கு அனைத்துலக சமூகம் பொறுப்பெடுக்க வேண்டும்.

இக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மட்டும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாம் வழங்கப் போதில்லை.

தமிழ் மக்களுக்கென சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைதல் ஒன்றே சிங்களத்தின் தமிழினவழிப்புத்திட்டத்தை ஈடு செய்யக்கூடிய அரசியல் ஏற்பாடாக அமைய முடியும் என்பதனை இந் நாளில் அனைத்துலக சமூகத்திற்கு நாம் வலியுறுத்திச்சொல்வோம்.

முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் மூச்சிழந்துபோன நம் மக்களை நினைவில் இருத்தி, தலைசாய்த்து நமது வணக்கத்தைச் செலுத்திக் கொள்வோம்.

இலங்கைத்தீவின் வட-கிழக்குப் பகுதிகளை தமது தாயகமாய்க் கொண்டு காலாதி காலமாக ஒரு தேசமாக வாழ்ந்து வருபவர்கள் ஈழத் தமிழ் மக்கள். தமிழ் மக்களை உதிரிகளாய்ச் சிதைத்து தமிழர் தேசத்தைக் கபளீகரம் செய்வதற்கு நீண்ட காலமாக சிங்களம் திட்டமிட்டுச் செயற்பட்டு வருவதனை நீங்கள் அறிவீர்கள்.

இதற்காகச் சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மொழி, பௌத்த மத முதன்மை முதற்கொண்டு பல்வேறு இனப்படுகொலைத் தாக்குதல்கள், உயர் கல்வியில் தரபபடுத்தல் போன்ற பல்வேறு திட்டமிட்ட தமிழர் தேசத்திற்கெதிரான நடவடிக்கைகளை சிங்களம் செயற்படுத்தியது.

1956 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட காலத்தில் 157 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இவற்றுடன் தொடர்புபட்டவர்கள் எவரும் தண்டிக்கப்படவேயில்லை.

இதன் நீட்சியாக ஈழத் தமழர் தேசத்தைக் கபளீகரம் செய்யும் நோக்கத்துடன்தான்

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் இரத்தவாற்றின் மத்தியில் தன் ஆக்கிரமிப்பின் அசிங்கக்காற்களை விரித்து நின்றது.

முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழீழ தேசம் தமது கால்களில் வீழ்ந்து சரணாகதியடைந்து விடும் என்ற இறுமாப்புடன் சிங்களம் திளைத்திருந்தது.

ஈழத் தமிழர் தேசம் மட்டுமல்ல, தனது மேலாதிக்கத்துக்கு சவாலாக இருக்கும் எவரையும் விட்டு வைப்பதற்கு சிங்கள பௌத்த பேரினவாதம் தயாராக இருக்கவில்லை.

இனச்சுத்திகரிப்பாகக் கருதப்படக்ககூடிய, மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கி அவர்களை நாட்டை விட்டுத் துரத்தும் திட்டமும் சிங்களப்பேரினவாத்தின் ஒற்றை மையச் சிந்தனையில் இருந்தே எழுந்தது.

சிங்களப் பேரினவாதத்தின் இவ் ஒற்றைமையச் சிந்தனை என்பது இலங்தைத்தீவு தமக்கே மட்டும் சொந்தமானது என்பதனை அடிப்டையாகக் கொண்டு, தாம் தீர்மானிக்கும் விதத்தில்தான் ஏனைய மக்கள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டுள்ளது. இச் சிற்தனை மகாவம்ச மனப்போக்கிலிருந்து கிளர்தெழுந்து வருகின்றது.

சிங்கள தேசம் தவிர்ந்த ஏனைய மக்கள் தேசமாக வாழும் நிலை இருப்பின் இது சிங்கள தேசத்துக்கு ஆபத்தானது என்ற அபத்தாமன எண்ணமும் இந்த சிங்கள ஒற்றை மையச் சிந்தனையில் இருக்கிறது.

இதன் வெளிப்பாடாகத்தான் பல்வேறு திட்டமிட்ட நடவடிக்ககைள் ஊடாகத் ஈழத் தமிழ் மக்களின் தேசத் தகைமையை அழிப்பதற்கு சிங்களம் பகீரத முயற்சி எடுத்து வருகிறது.

சிங்களம் எதிர்பார்த்தவாறு முள்ளவாய்க்கால் இனவழிப்பின் பின் தமிழ் மக்களைச் சரணாகதியடைய வைக்கும் திட்டத்தில் சிங்களத்தால் வெற்றி காண முடியவில்லை.

தாயக மண்ணில் விதையாக வீழ்ந்திருக்கும் மாவீர்கள் நமது மக்களின் மனங்களில் நிறைந்திருப்பதால் அவர்களை எவரும் சரணாகததியடைய வைப்பதும் இலகுவானதல்ல.

ஈழத் தமிழர் தேசம், நாடு கடந்த தேசமாகப் பரிணமித்திருப்பதால் ஈழத் தமிழர் தேசத்தின் அங்கமாக அமைந்துள்ள புலம் பெயர் தமிழ் மக்களும் சிங்ளத்தின் தமிழர்களின் சரணாகதிக் கனவுக்குச் சிம்மசொப்பனமாக உள்ளனர்.

நமது தொப்புள் கொடி உறவாக உள்ள தமிழ் நாட்டு மக்களும், உலகின் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் ஈழத் தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் இனவழிப்ப முயற்சிக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களாக உள்ளனர்.

இவையெல்லாம் ஈழத் தமிழர் தேசத்துக்கான பாதுகாப்புக் கவசங்களாக உள்ளன. இருந்த போதும், தமிழ் மக்கள் மீது சிங்களம் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு நீண்ட காலத்துக்கு நீடிப்பின் அது ஆபத்தை தரக்கூடியது என்பதனையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனது ஆயுதப்போராட்டத்தை மௌனித்த பின்னர் சிங்கத்தின் கட்டமைப்புசார் இனவழிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தக்கூடிய வலிமை தமழிர் தேசத்திடம் பலவீனப்பட்டுடுள்ளது என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இச் சூழலில் தனது கட்டமைப்புசார் இனவழிப்பு முயற்சியை சிங்களம் வேகப்படுத்த முயலும். இது குறித்து தமிழர் தேசம் மிகவும் வி ழிப்பாக இருந்து இம் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்..

முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகியும் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதி வழங்குவதில் அனைத்துலக சமூகம், குறிப்பாக அனைத்துலக அரசுகள் பராமுகமாக இருக்கின்றன என்ற உண்மையினை நாம் வேதனையடன் பதிவு செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.

முள்ளிவாய்க்காலில் சிங்களம் ஆடிய வெறியாட்டம் ஆதாரங்கள் ஏதுமின்றி, சாட்சிகள் ஏதுமின்றி நடந்து முடிந்ததொரு நிகழ்வல்ல.

முள்ளிவாய்காலில் இருந்து இறுதிக்கட்டத்தில் வெளியேறிய மக்கள் ஆயிரக்கணக்கான சாட்சியங்களாக உள்ளனர். இறுதி நேரத்தில் நிகழ்ந்தவை அனைத்துலக அரசுகளிடம் செய்மதிப்படங்களாக உள்ளன.

அரசுகளுக்கு சார்பான உலக ஓழுங்கும், இலங்கைத்தீவின் அரசாக சிங்கள சிறிலங்கா அரசு இருப்பதுவும், இந்த அரசு அனைத்துலக அரசுகளின் பங்காளியாக இருப்பதுவும் அரசற்ற ஈழ தேச மக்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தடையாக உள்ளன.

நாம் ஒரு அரசாக மாறும்போதுதான் எமக்கான முக்கியமான நீதியைப் பெறலாம்.

உண்மையில் இந்த அனைத்தலக அரசுகள், மக்களைப் பாதுகாப்பதற்காக விடுதலைப்புலிகள் முன்வைத்த யுத்தநிறுத்தக் கோரிக்கையை செவிமடுத்து யுத்த நிறுத்தத்தை கொண்டு வந்திருந்தால் நடைபெற்று முடிந்த இனவழிப்பைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

இனவழிப்பு நிகழ்ந்தாலும், தமது பூகோள மற்றும் புவிசார் நலன்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட வேண்டும் என அனைத்துலக அரசுகள் காட்டிய பச்சைக்கொடியே முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பைச் சாத்தியமாக்கியது.

தமிழினவழிப்பை முன்னின்று நடாத்திய மகிந்த – கோத்தபாய ராஜபச்சக்கள் பதவியில் இல்லாத காலத்திலும்கூட அவர்களுக்கு சட்ட விதிவிலக்கு (immunity) இல்லாத நிலையிலும் கூட இவர்களை நீதியின் பேரால் தண்டனைக்குள்ளாக்கும் முனைப்பும் அனைத்துலக அரசுகளுக்கு இருக்கவில்லை.

இந்த உண்மையை நாம் அனைத்துலக அரசுகளுக்கு இடித்துரைக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதில் அவர்களுக்குரிய பொறுப்பை சுட்டிக் காட்ட வேண்டும்.

சிறிலங்கா அரசு இராணுவ முனைப்புள்ள அரசாக மாற்றம் கண்டிருக்கிறது. பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினரின் அளவும், பெரும் இராணுவச் செலவீனஙகளும் குறைக்கப்படவில்லை.

சிறிலங்கா சந்திக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு யுத்தம்தான் முக்கிய காரணம் எனும உண்மையும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. 

தமிழர் தாயகப்பகுதியெங்கும் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினர் குடிமக்கள் மேற்கொள்ளும் தொழில் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

தமிழர் பூமியெங்கும் புத்த கோவில்களை அமைத்து தமிழர் தாயகத்தின் நிலக் கட்டமைப்பினதும் பண்பாட்டுகட்டமைப்பினதும தோற்றத்தை சிங்கள தேசம் போல உருவாக்க முயல்கின்றனர்.

இலங்கைத்தீவினை அனைத்துலக அரசுகளுக்கு பங்கு போட்டுக் கொடுத்து அதற்கு பிரதிபலனாக தாம் தமிழர் தேசத்தைக் கபளீகரம் செய்வதனை அவை பராமுகமாக இருக்கும் நிலையை  சிறிலங்கா அரசு தோற்றுவிக்கிறது.

இந்த நிலையில் ஈழத் தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துத் தக்க வைப்பதற்கான வியூகங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைத்தலே சிங்களத்தின் இனவழிப்பலிருந்து தப்பித்து, கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான அரசியல் ஏற்பாடாக அமைய முடியும் என்பதில் தாயகத் தமிழ் அரசியல் தலைவர்கள் தெளிவான பார்வையைக் கொண்டிருத்தல் அவசியம்.

இவ் இலக்கு தொலைநோக்குக் கொண்ட இலக்காக இருக்கலாம். ஆனால் இதனை விட்டால் வேறு தெரிவேதும் எமக்கு இல்லை என்பதை காலம் நமக்கு நன்கு உணர்த்தியருக்கிறது.

இதனால், ஈழத் தமிழர் தேசத்தின் இருப்பை பலமாகக் கட்டி அமைப்பதில் நாம் தேசமாக அணி திரண்டு முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.

ஈழத் தமிழ் தேசமாக சிந்தித்து, ஈழத்தமிழர தேசத்தின் அரசியலை கட்டமைப்பதில், சமூகநீதி நிலவும் சமூகத்தை கட்டி எழுப்புவதில, பொருளாதார வாழ்வை  மேம்படுத்துவதில், பண்பாட்டு அழுக்குகளை நீக்கி பண்பாட்டைச் செழுமைப்படுத்துவதில் நாம் முழுமையாக ஈடுபடவேண்டும்.

இச் செயற்பாடுகளின் ஊடாக வலுவான ஈழத் தமிழ் தேசத்தை நாம் உருவாக்கும் போது நமது விடுதலைக்குத் தேவையான அடித்தளம் பலமாக அமையும்.

முள்ளிவாய்க்கால் ஈகிகளை நினைவுகூரும் இந் நாளில் ஒரு வலுவான ஈழத் தமிழ் தேசத்தை உருவாக்கும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோமாக.

தமிழரின் தலைவிதி தமிழர் கையில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். - என்றுள்ளது.



முள்ளிவாய்க்காலில் சிங்களம் அடைந்த வெற்றி இராணுவ வெற்றி அல்ல; இன அழிப்பின் வெற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் samugammedia நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய பெரும் தமிழினவழிப்பின் நினைவுகளை, அறச்சீற்றத்துடன் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றாய்க்கூடி நினைவுகூரும் நாள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் தெரிவித்தார்.அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,இற்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர், 2009 ஆம் ஆண்டு மே மாதம் சிங்கள இனவாதப்பூதம் தமிழீழ தேசம் மீது நடாத்திய இனவழிப்பு வெறியாட்டத்தின் நினைவு நாள்.நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய பெரும் தமிழினவழிப்பின் நினைவுகளை, அறச்சீற்றத்துடன் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றாய்க்கூடி நினைவுகூரும் நாள்.நமது மக்கள் கொத்துக் கொத்தாய் சிங்களத்தின் இனவழிப்பில் கொல்லப்பட்டமை நமது தேசத்தில் ஏற்படுத்திய பெருந்துயரை நாம் தமிழீழத் தேசிய துக்கநாளாய் அனுட்டிக்கும் நாள்.சிறிலங்கா அரசு தமிழினவழிப்பினூடு நம் தேசத்தில் ஏற்படுத்திய பெருந்துயர் ஓர் ஆறாத வடுவாக தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறது.முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களம் அடைந்தது யுத்தத்தை வெற்றி கொண்ட ஓர் இராணுவ வெற்றி அல்ல. உணவுத்தடை, மருந்துத்தடை, இடைவிடாத குண்டு வீச்சுகள் காரணமாக மக்களை பராமரிக்கும் சுமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தோள்கள் மீது சுமத்தப்பட்டது. கஞ்சிக் கொட்டில்கள் அமைத்தும், 24 மணி நேர மருந்துக் கொட்டகைகள் அமைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் “யுத்தகளத்தில் போராடுவதற்கு இருக்கும் வீரத்தை விடவும், யுத்தத்தால் ஏற்படும் சுமையை தாங்குவதற்கான வீரம் பெரிதாக இருக்க வேண்டும்.” என்ற சன் டுஸ் (Sun Tzu) இன் வாசகங்களிற்கு இலக்கணமாக செயற்பட்டார்கள். இச் சுமை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலுவில் எதிர்த் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே சிங்களம் வெற்றி கொண்டது. இது ஓர் இனவழிப்பு. எந்தவித அறமுமின்றி இனவழிப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆக்கிரமிப்பு.முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசு எழுப்பிய வெற்றி முழக்கும் ஓர் இனவழிப்பு வெற்றி முழக்கம். ஆக்கிரமிப்பு வெற்றி முழக்கம். இது குறித்து உணமையில் சிங்கள மக்கள் வெட்கித் தலைகுனிந்திருக்க வேண்டும்.இத் தமிழினவழிப்புக் குற்றவாளிகள் அனைத்துலகச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சிறிலங்கா அரசுதான் இனவழிப்பின் முதற் குற்றவாளி என்பதுவும் நிலைநிறத்தப்பட வேண்டியது.தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்காக மட்டுமல்ல, உலகின் ஏனைய நாடுகளில் இனவழிப்பில் ஈடுபடக்கூடிய கொடிய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்காகவும் தமிழினவழிப்புக் குற்றவாளிகள் அனைத்துலக நீதிப்பொறிமுறையின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள்.தமிழினவழிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கபடும் நிலையை ஏற்படுத்தவதற்காக நாம் தொடர்ச்சியாகப் போராட வேண்டியுள்ளது.நீதி, அனைத்துலக உறவுகளாலும், நலன்களாலும அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அவலநிலைக்கு அனைத்துலக சமூகம் பொறுப்பெடுக்க வேண்டும்.இக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மட்டும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாம் வழங்கப் போதில்லை.தமிழ் மக்களுக்கென சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைதல் ஒன்றே சிங்களத்தின் தமிழினவழிப்புத்திட்டத்தை ஈடு செய்யக்கூடிய அரசியல் ஏற்பாடாக அமைய முடியும் என்பதனை இந் நாளில் அனைத்துலக சமூகத்திற்கு நாம் வலியுறுத்திச்சொல்வோம்.முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் மூச்சிழந்துபோன நம் மக்களை நினைவில் இருத்தி, தலைசாய்த்து நமது வணக்கத்தைச் செலுத்திக் கொள்வோம்.இலங்கைத்தீவின் வட-கிழக்குப் பகுதிகளை தமது தாயகமாய்க் கொண்டு காலாதி காலமாக ஒரு தேசமாக வாழ்ந்து வருபவர்கள் ஈழத் தமிழ் மக்கள். தமிழ் மக்களை உதிரிகளாய்ச் சிதைத்து தமிழர் தேசத்தைக் கபளீகரம் செய்வதற்கு நீண்ட காலமாக சிங்களம் திட்டமிட்டுச் செயற்பட்டு வருவதனை நீங்கள் அறிவீர்கள்.இதற்காகச் சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மொழி, பௌத்த மத முதன்மை முதற்கொண்டு பல்வேறு இனப்படுகொலைத் தாக்குதல்கள், உயர் கல்வியில் தரபபடுத்தல் போன்ற பல்வேறு திட்டமிட்ட தமிழர் தேசத்திற்கெதிரான நடவடிக்கைகளை சிங்களம் செயற்படுத்தியது.1956 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட காலத்தில் 157 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இவற்றுடன் தொடர்புபட்டவர்கள் எவரும் தண்டிக்கப்படவேயில்லை.இதன் நீட்சியாக ஈழத் தமழர் தேசத்தைக் கபளீகரம் செய்யும் நோக்கத்துடன்தான்முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் இரத்தவாற்றின் மத்தியில் தன் ஆக்கிரமிப்பின் அசிங்கக்காற்களை விரித்து நின்றது.முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழீழ தேசம் தமது கால்களில் வீழ்ந்து சரணாகதியடைந்து விடும் என்ற இறுமாப்புடன் சிங்களம் திளைத்திருந்தது.ஈழத் தமிழர் தேசம் மட்டுமல்ல, தனது மேலாதிக்கத்துக்கு சவாலாக இருக்கும் எவரையும் விட்டு வைப்பதற்கு சிங்கள பௌத்த பேரினவாதம் தயாராக இருக்கவில்லை.இனச்சுத்திகரிப்பாகக் கருதப்படக்ககூடிய, மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கி அவர்களை நாட்டை விட்டுத் துரத்தும் திட்டமும் சிங்களப்பேரினவாத்தின் ஒற்றை மையச் சிந்தனையில் இருந்தே எழுந்தது.சிங்களப் பேரினவாதத்தின் இவ் ஒற்றைமையச் சிந்தனை என்பது இலங்தைத்தீவு தமக்கே மட்டும் சொந்தமானது என்பதனை அடிப்டையாகக் கொண்டு, தாம் தீர்மானிக்கும் விதத்தில்தான் ஏனைய மக்கள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டுள்ளது. இச் சிற்தனை மகாவம்ச மனப்போக்கிலிருந்து கிளர்தெழுந்து வருகின்றது.சிங்கள தேசம் தவிர்ந்த ஏனைய மக்கள் தேசமாக வாழும் நிலை இருப்பின் இது சிங்கள தேசத்துக்கு ஆபத்தானது என்ற அபத்தாமன எண்ணமும் இந்த சிங்கள ஒற்றை மையச் சிந்தனையில் இருக்கிறது.இதன் வெளிப்பாடாகத்தான் பல்வேறு திட்டமிட்ட நடவடிக்ககைள் ஊடாகத் ஈழத் தமிழ் மக்களின் தேசத் தகைமையை அழிப்பதற்கு சிங்களம் பகீரத முயற்சி எடுத்து வருகிறது.சிங்களம் எதிர்பார்த்தவாறு முள்ளவாய்க்கால் இனவழிப்பின் பின் தமிழ் மக்களைச் சரணாகதியடைய வைக்கும் திட்டத்தில் சிங்களத்தால் வெற்றி காண முடியவில்லை.தாயக மண்ணில் விதையாக வீழ்ந்திருக்கும் மாவீர்கள் நமது மக்களின் மனங்களில் நிறைந்திருப்பதால் அவர்களை எவரும் சரணாகததியடைய வைப்பதும் இலகுவானதல்ல.ஈழத் தமிழர் தேசம், நாடு கடந்த தேசமாகப் பரிணமித்திருப்பதால் ஈழத் தமிழர் தேசத்தின் அங்கமாக அமைந்துள்ள புலம் பெயர் தமிழ் மக்களும் சிங்ளத்தின் தமிழர்களின் சரணாகதிக் கனவுக்குச் சிம்மசொப்பனமாக உள்ளனர்.நமது தொப்புள் கொடி உறவாக உள்ள தமிழ் நாட்டு மக்களும், உலகின் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் ஈழத் தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் இனவழிப்ப முயற்சிக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களாக உள்ளனர்.இவையெல்லாம் ஈழத் தமிழர் தேசத்துக்கான பாதுகாப்புக் கவசங்களாக உள்ளன. இருந்த போதும், தமிழ் மக்கள் மீது சிங்களம் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு நீண்ட காலத்துக்கு நீடிப்பின் அது ஆபத்தை தரக்கூடியது என்பதனையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனது ஆயுதப்போராட்டத்தை மௌனித்த பின்னர் சிங்கத்தின் கட்டமைப்புசார் இனவழிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தக்கூடிய வலிமை தமழிர் தேசத்திடம் பலவீனப்பட்டுடுள்ளது என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.இச் சூழலில் தனது கட்டமைப்புசார் இனவழிப்பு முயற்சியை சிங்களம் வேகப்படுத்த முயலும். இது குறித்து தமிழர் தேசம் மிகவும் வி ழிப்பாக இருந்து இம் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகியும் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதி வழங்குவதில் அனைத்துலக சமூகம், குறிப்பாக அனைத்துலக அரசுகள் பராமுகமாக இருக்கின்றன என்ற உண்மையினை நாம் வேதனையடன் பதிவு செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.முள்ளிவாய்க்காலில் சிங்களம் ஆடிய வெறியாட்டம் ஆதாரங்கள் ஏதுமின்றி, சாட்சிகள் ஏதுமின்றி நடந்து முடிந்ததொரு நிகழ்வல்ல.முள்ளிவாய்காலில் இருந்து இறுதிக்கட்டத்தில் வெளியேறிய மக்கள் ஆயிரக்கணக்கான சாட்சியங்களாக உள்ளனர். இறுதி நேரத்தில் நிகழ்ந்தவை அனைத்துலக அரசுகளிடம் செய்மதிப்படங்களாக உள்ளன.அரசுகளுக்கு சார்பான உலக ஓழுங்கும், இலங்கைத்தீவின் அரசாக சிங்கள சிறிலங்கா அரசு இருப்பதுவும், இந்த அரசு அனைத்துலக அரசுகளின் பங்காளியாக இருப்பதுவும் அரசற்ற ஈழ தேச மக்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தடையாக உள்ளன.நாம் ஒரு அரசாக மாறும்போதுதான் எமக்கான முக்கியமான நீதியைப் பெறலாம்.உண்மையில் இந்த அனைத்தலக அரசுகள், மக்களைப் பாதுகாப்பதற்காக விடுதலைப்புலிகள் முன்வைத்த யுத்தநிறுத்தக் கோரிக்கையை செவிமடுத்து யுத்த நிறுத்தத்தை கொண்டு வந்திருந்தால் நடைபெற்று முடிந்த இனவழிப்பைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.இனவழிப்பு நிகழ்ந்தாலும், தமது பூகோள மற்றும் புவிசார் நலன்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட வேண்டும் என அனைத்துலக அரசுகள் காட்டிய பச்சைக்கொடியே முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பைச் சாத்தியமாக்கியது.தமிழினவழிப்பை முன்னின்று நடாத்திய மகிந்த – கோத்தபாய ராஜபச்சக்கள் பதவியில் இல்லாத காலத்திலும்கூட அவர்களுக்கு சட்ட விதிவிலக்கு (immunity) இல்லாத நிலையிலும் கூட இவர்களை நீதியின் பேரால் தண்டனைக்குள்ளாக்கும் முனைப்பும் அனைத்துலக அரசுகளுக்கு இருக்கவில்லை.இந்த உண்மையை நாம் அனைத்துலக அரசுகளுக்கு இடித்துரைக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதில் அவர்களுக்குரிய பொறுப்பை சுட்டிக் காட்ட வேண்டும்.சிறிலங்கா அரசு இராணுவ முனைப்புள்ள அரசாக மாற்றம் கண்டிருக்கிறது. பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினரின் அளவும், பெரும் இராணுவச் செலவீனஙகளும் குறைக்கப்படவில்லை.சிறிலங்கா சந்திக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு யுத்தம்தான் முக்கிய காரணம் எனும உண்மையும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. தமிழர் தாயகப்பகுதியெங்கும் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினர் குடிமக்கள் மேற்கொள்ளும் தொழில் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.தமிழர் பூமியெங்கும் புத்த கோவில்களை அமைத்து தமிழர் தாயகத்தின் நிலக் கட்டமைப்பினதும் பண்பாட்டுகட்டமைப்பினதும தோற்றத்தை சிங்கள தேசம் போல உருவாக்க முயல்கின்றனர்.இலங்கைத்தீவினை அனைத்துலக அரசுகளுக்கு பங்கு போட்டுக் கொடுத்து அதற்கு பிரதிபலனாக தாம் தமிழர் தேசத்தைக் கபளீகரம் செய்வதனை அவை பராமுகமாக இருக்கும் நிலையை  சிறிலங்கா அரசு தோற்றுவிக்கிறது.இந்த நிலையில் ஈழத் தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துத் தக்க வைப்பதற்கான வியூகங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைத்தலே சிங்களத்தின் இனவழிப்பலிருந்து தப்பித்து, கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான அரசியல் ஏற்பாடாக அமைய முடியும் என்பதில் தாயகத் தமிழ் அரசியல் தலைவர்கள் தெளிவான பார்வையைக் கொண்டிருத்தல் அவசியம்.இவ் இலக்கு தொலைநோக்குக் கொண்ட இலக்காக இருக்கலாம். ஆனால் இதனை விட்டால் வேறு தெரிவேதும் எமக்கு இல்லை என்பதை காலம் நமக்கு நன்கு உணர்த்தியருக்கிறது.இதனால், ஈழத் தமிழர் தேசத்தின் இருப்பை பலமாகக் கட்டி அமைப்பதில் நாம் தேசமாக அணி திரண்டு முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.ஈழத் தமிழ் தேசமாக சிந்தித்து, ஈழத்தமிழர தேசத்தின் அரசியலை கட்டமைப்பதில், சமூகநீதி நிலவும் சமூகத்தை கட்டி எழுப்புவதில, பொருளாதார வாழ்வை  மேம்படுத்துவதில், பண்பாட்டு அழுக்குகளை நீக்கி பண்பாட்டைச் செழுமைப்படுத்துவதில் நாம் முழுமையாக ஈடுபடவேண்டும்.இச் செயற்பாடுகளின் ஊடாக வலுவான ஈழத் தமிழ் தேசத்தை நாம் உருவாக்கும் போது நமது விடுதலைக்குத் தேவையான அடித்தளம் பலமாக அமையும்.முள்ளிவாய்க்கால் ஈகிகளை நினைவுகூரும் இந் நாளில் ஒரு வலுவான ஈழத் தமிழ் தேசத்தை உருவாக்கும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோமாக.தமிழரின் தலைவிதி தமிழர் கையில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement