• Jan 17 2025

நாட்டில் அதிகரித்துள்ள தங்க விலை நிலவரம்!

Tharmini / Jan 16th 2025, 1:55 pm
image

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16) சற்று அதிகரித்துள்ளது.

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 215,000 ரூபாவாக உள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுணானது 198,500 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் (10) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 214,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 197,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,697.08 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

நாட்டில் அதிகரித்துள்ள தங்க விலை நிலவரம் இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16) சற்று அதிகரித்துள்ளது.கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 215,000 ரூபாவாக உள்ளது.22 கரட் தங்கம் ஒரு பவுணானது 198,500 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் (10) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 214,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 197,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,697.08 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement