• May 06 2024

வடக்கில் சுகாதார துறையில் நிலவும் ஆளணி வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு...! ஆளுநரிடம் உறுதியளித்த சுகாதார அமைச்சர்...!

Sharmi / Mar 5th 2024, 3:18 pm
image

Advertisement

வடமாகாணத்தில் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநரால் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கொழும்பு சுவசெரிபாயவில் அமைந்துள்ள சுகாதார  அமைச்சில் இன்று(05) சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, வடக்கு மாகாணத்தில் சுகாதார துறைக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுனரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

அதேவேளை, வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என வடக்கு மாகாண ஆளுநரிடம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த சந்திப்பின்போது உறுதியளித்தார். 

இந்த சந்திப்பில்,  மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.ஜி.மஹிபாலவும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




வடக்கில் சுகாதார துறையில் நிலவும் ஆளணி வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு. ஆளுநரிடம் உறுதியளித்த சுகாதார அமைச்சர். வடமாகாணத்தில் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநரால் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கொழும்பு சுவசெரிபாயவில் அமைந்துள்ள சுகாதார  அமைச்சில் இன்று(05) சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது, வடக்கு மாகாணத்தில் சுகாதார துறைக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுனரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது.அதேவேளை, வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என வடக்கு மாகாண ஆளுநரிடம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த சந்திப்பின்போது உறுதியளித்தார். இந்த சந்திப்பில்,  மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.ஜி.மஹிபாலவும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement