• May 17 2024

நாட்டின் முக்கிய வைத்தியசாலைகளுக்கு ஏற்பட்ட நிலை..! வெளியான அறிவிப்பு..!samugammedia

Sharmi / Jul 27th 2023, 10:10 am
image

Advertisement

சுமார் பதினாறு கோடி ரூபா நிலுவையாகவுள்ள மின்சாரக் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஏழு வைத்தியசாலைகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது என ஜூலை 20ஆம் திகதி சுகாதார அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை மின்சார சபை  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, சொய்சா மகளிர் வைத்தியசாலை, இலங்கை தேசிய பல் வைத்தியசாலை, ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மாளிகாவத்தை விருத்கவேத தேசிய சிறுநீரக மாற்று சிகிச்சை நிலையம், தேசிய கண் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை என்பன அந்த ஏழு வைத்தியசாலைகளாகும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாத்திரம் பன்னிரண்டு கோடி ரூபா மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எஞ்சிய ஆறு வைத்தியசாலைகளுக்கு கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபா மின்சாரக் கட்டணம் உள்ளதாகவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நோயாளிகளின் நலன் கருதி இலங்கை மின்சார சபை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பல தடவைகள் மின்சாரம் துண்டிக்கப்படாமல் தொடர்ச்சியான சேவையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் இனி தேசிய வைத்தியசாலைக்கு மின்சாரம் வழங்க முடியாது என சபை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நாட்டின் முக்கிய வைத்தியசாலைகளுக்கு ஏற்பட்ட நிலை. வெளியான அறிவிப்பு.samugammedia சுமார் பதினாறு கோடி ரூபா நிலுவையாகவுள்ள மின்சாரக் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஏழு வைத்தியசாலைகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது என ஜூலை 20ஆம் திகதி சுகாதார அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை மின்சார சபை  தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தேசிய வைத்தியசாலை, சொய்சா மகளிர் வைத்தியசாலை, இலங்கை தேசிய பல் வைத்தியசாலை, ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மாளிகாவத்தை விருத்கவேத தேசிய சிறுநீரக மாற்று சிகிச்சை நிலையம், தேசிய கண் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை என்பன அந்த ஏழு வைத்தியசாலைகளாகும். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாத்திரம் பன்னிரண்டு கோடி ரூபா மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.எஞ்சிய ஆறு வைத்தியசாலைகளுக்கு கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபா மின்சாரக் கட்டணம் உள்ளதாகவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.நோயாளிகளின் நலன் கருதி இலங்கை மின்சார சபை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பல தடவைகள் மின்சாரம் துண்டிக்கப்படாமல் தொடர்ச்சியான சேவையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால் இனி தேசிய வைத்தியசாலைக்கு மின்சாரம் வழங்க முடியாது என சபை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement