• Apr 28 2024

கடற்தொழிலாளர்களின் பிரச்சினையை கணக்கிலெடுக்காத தமிழரசுக் கட்சி..! யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கண்டனம்..!samugammedia

Sharmi / Jul 10th 2023, 3:52 pm
image

Advertisement

கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் கூட்டத்தின் போது பேசப்படவில்லை என்பது குறித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

யாழில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசு கட்சியின் கூட்டத்தின் போது, 13 ஆம் திருத்தம் பற்றியும், புதைகுழிகள் பற்றியும் பேசினார்கள். ஆனால் கடற்தொழிலாளர் பற்றி பேசவில்லை. ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பொருட்டு நீங்கள் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய விடயம் கடற்தொழிலாளர்களின் பிரச்சினை.

ஆனால் அந்த கூட்டத்தில் 13 ஆம் திருத்தம் பற்றி பேசப்படுகின்றது. அது இந்தியர்களால் கொண்டிவரப்பட்ட விடயமாகும். அது பற்றி இந்தியா பார்க்கும் என்பதை நாம் அறிவோம்.

நேற்று நெடுந்தீவில் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான விடயங்கள் அதாவது இந்திய படகுகள் இலங்கை எல்லையை தாண்டி வருவது குறித்து பேசப்படவேண்டும்.

இந்நிலையில் இந்திய கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது என இந்திய மக்கள் கவலையடைகின்றனர். ஆனால் இவ்வாறான விடயங்கள் குறித்து இலங்கை கடற்படை எதிர்காலத்திலும் அதிக  கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கடற்தொழிலாளர்களின் பிரச்சினையை கணக்கிலெடுக்காத தமிழரசுக் கட்சி. யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கண்டனம்.samugammedia கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் கூட்டத்தின் போது பேசப்படவில்லை என்பது குறித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.யாழில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியின் கூட்டத்தின் போது, 13 ஆம் திருத்தம் பற்றியும், புதைகுழிகள் பற்றியும் பேசினார்கள். ஆனால் கடற்தொழிலாளர் பற்றி பேசவில்லை. ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பொருட்டு நீங்கள் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய விடயம் கடற்தொழிலாளர்களின் பிரச்சினை.ஆனால் அந்த கூட்டத்தில் 13 ஆம் திருத்தம் பற்றி பேசப்படுகின்றது. அது இந்தியர்களால் கொண்டிவரப்பட்ட விடயமாகும். அது பற்றி இந்தியா பார்க்கும் என்பதை நாம் அறிவோம். நேற்று நெடுந்தீவில் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான விடயங்கள் அதாவது இந்திய படகுகள் இலங்கை எல்லையை தாண்டி வருவது குறித்து பேசப்படவேண்டும்.இந்நிலையில் இந்திய கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது என இந்திய மக்கள் கவலையடைகின்றனர். ஆனால் இவ்வாறான விடயங்கள் குறித்து இலங்கை கடற்படை எதிர்காலத்திலும் அதிக  கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement