• May 12 2024

பொருட்களின் விலை ஊடக செய்திகளிலே குறைந்துள்ளன..!உண்மையில் குறையவில்லை..! மு.தம்பிராசா ஆதங்கம்...!samugammedia

Sharmi / Jul 10th 2023, 3:43 pm
image

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தினால் தமக்கு அனுபவமுள்ள மற்றும் புத்தி கூர்மையான அதிகாரிகளை நியமித்து மக்கள் தொடர்பான தவறான விடயங்களினை ஆராய வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தற்பொழுது உணவு பொருட்களின் விலை குறைந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்ற போதிலும், யாழ் மாவட்டத்தில் எந்தவொரு உணவகங்களிலோ அல்லது விற்பனை நிலையங்களிலும் விலை குறைந்ததாக தெரியவில்லை.

ஆயினும், விலை குறைந்த தவறான பொருட்கள் மக்களிற்கு விற்கப்படுகின்றன. அவ்வாறான பொருட்களில் உணவு தயாரித்து உட்கொண்டால் ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

இவ்வாறாக மக்களின் நாளின் அக்கறை கொண்டு சுகாதார அதிகாரிகள் தவறான பொருட்களை விற்பவர்களையும், அதனை பயன்படுத்தும் உணவகங்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தினால் மட்டும் அவர்கள் அந்த நிலையை மாற்றிக் கொள்வார்கள் என்றில்லை.  மாறாக நீதிமன்றத்தில் குற்றப் பணத்தை செலுத்தி விட்டு தமது தொழிலை ஆரம்பித்து விடுவார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் யாழில் மட்டுமன்றி, வடக்கு,கிழக்கு,மலையகம் போன்ற இடங்களிலும் இந்த நிலைமையே நிலவுகின்றது.

இது தொடர்பாக எமது மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் வேண்டும். மக்கள் போர் மற்றும் வறுமை போன்றவற்ற துன்பங்களால் அழிந்து கொண்டுள்ளனர். இவ்வாறான அஜினமோட் சம்மந்தப்பட்ட உணவுகள் கூட  அவர்களின் உயிரை பறிக்கும் விடயமாகவே உள்ளது.

ஆகவே, இது குறித்து ஒவ்வொரு பிரிவிற்கும் உட்பட்ட சுகாதார அதிகாரிகள் சும்மா அலுவலங்களில் குந்தியிருக்காது கிழமைக்கு கிழமை, விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள்  போன்றவற்றை பரிசீலிக்க வேண்டும்.

காலாவதியான சோடாக்களை விற்பனை செய்த டிஸ்சிவுட்டரை ஒரு சுகாதார அதிகாரி கண்டு பிடித்துள்ளார்.  அவருக்கு ஒரு கோடி அபராதம் விதிப்பட்டிருப்பின் திருப்பி அவ்வாறான வேலையினை செய்ய மாட்டார்.

மக்களின் உயிர்களை காவு வாங்குகின்ற தவறான வேலைகளை செய்பவர்களிற்கு காத்திரமான தண்டப் பணங்களை அறவிட்டால் மட்டுமே முற்றாக அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்

ஒவ்வொரு பாராளுமனற உறுப்பினர்களிற்கும் அதிகாரிகளை அரசாங்கம் காசு கொடுத்து நியமித்துள்ளது. அவர்களது மனைவிமார்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் சமைத்து தான் கொடுப்பார்கள்.

ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர்கள்,  அனுபவமுள்ள, புத்தி கூர்மையான அதிகாரிகளை தமக்கு  நியமித்து மக்கள் தொடர்பான இவ்வாறான தவறான விடயங்களினை  ஆராய வேண்டும் என வினையமாக வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

பொருட்களின் விலை ஊடக செய்திகளிலே குறைந்துள்ளன.உண்மையில் குறையவில்லை. மு.தம்பிராசா ஆதங்கம்.samugammedia பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தினால் தமக்கு அனுபவமுள்ள மற்றும் புத்தி கூர்மையான அதிகாரிகளை நியமித்து மக்கள் தொடர்பான தவறான விடயங்களினை ஆராய வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், தற்பொழுது உணவு பொருட்களின் விலை குறைந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்ற போதிலும், யாழ் மாவட்டத்தில் எந்தவொரு உணவகங்களிலோ அல்லது விற்பனை நிலையங்களிலும் விலை குறைந்ததாக தெரியவில்லை. ஆயினும், விலை குறைந்த தவறான பொருட்கள் மக்களிற்கு விற்கப்படுகின்றன. அவ்வாறான பொருட்களில் உணவு தயாரித்து உட்கொண்டால் ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறாக மக்களின் நாளின் அக்கறை கொண்டு சுகாதார அதிகாரிகள் தவறான பொருட்களை விற்பவர்களையும், அதனை பயன்படுத்தும் உணவகங்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தினால் மட்டும் அவர்கள் அந்த நிலையை மாற்றிக் கொள்வார்கள் என்றில்லை.  மாறாக நீதிமன்றத்தில் குற்றப் பணத்தை செலுத்தி விட்டு தமது தொழிலை ஆரம்பித்து விடுவார்கள். இவ்வாறான செயற்பாடுகள் யாழில் மட்டுமன்றி, வடக்கு,கிழக்கு,மலையகம் போன்ற இடங்களிலும் இந்த நிலைமையே நிலவுகின்றது. இது தொடர்பாக எமது மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் வேண்டும். மக்கள் போர் மற்றும் வறுமை போன்றவற்ற துன்பங்களால் அழிந்து கொண்டுள்ளனர். இவ்வாறான அஜினமோட் சம்மந்தப்பட்ட உணவுகள் கூட  அவர்களின் உயிரை பறிக்கும் விடயமாகவே உள்ளது. ஆகவே, இது குறித்து ஒவ்வொரு பிரிவிற்கும் உட்பட்ட சுகாதார அதிகாரிகள் சும்மா அலுவலங்களில் குந்தியிருக்காது கிழமைக்கு கிழமை, விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள்  போன்றவற்றை பரிசீலிக்க வேண்டும். காலாவதியான சோடாக்களை விற்பனை செய்த டிஸ்சிவுட்டரை ஒரு சுகாதார அதிகாரி கண்டு பிடித்துள்ளார்.  அவருக்கு ஒரு கோடி அபராதம் விதிப்பட்டிருப்பின் திருப்பி அவ்வாறான வேலையினை செய்ய மாட்டார். மக்களின் உயிர்களை காவு வாங்குகின்ற தவறான வேலைகளை செய்பவர்களிற்கு காத்திரமான தண்டப் பணங்களை அறவிட்டால் மட்டுமே முற்றாக அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் ஒவ்வொரு பாராளுமனற உறுப்பினர்களிற்கும் அதிகாரிகளை அரசாங்கம் காசு கொடுத்து நியமித்துள்ளது. அவர்களது மனைவிமார்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் சமைத்து தான் கொடுப்பார்கள். ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர்கள்,  அனுபவமுள்ள, புத்தி கூர்மையான அதிகாரிகளை தமக்கு  நியமித்து மக்கள் தொடர்பான இவ்வாறான தவறான விடயங்களினை  ஆராய வேண்டும் என வினையமாக வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement