• Apr 27 2024

தமிழரசுக்கட்சியும் பிளவடையும் - கூட்டை பிரித்த சம்பந்தன் - நிலாந்தன் சுட்டிக்காட்டு!

Sharmi / Jan 30th 2023, 1:51 pm
image

Advertisement

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் பரிமான வளர்ச்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு என அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

எனவே, இதனை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அதன் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தமிழ் மக்களின் வரலாறு அவருக்குத் தந்த ஒரு முக்கியமான பொறுப்பை, அதாவது ஒரு பண்புருமாற்றத்துக்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.


அதன் விளைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 13 ஆண்டுகளாக உடைந்துடைந்து வந்து தற்பொழுது தமிழரசு கட்சி தனியே பிரிந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்கு தலைமை தாங்க முடியாத சம்பந்தன், கூட்டமைப்பைச் சிதைத்தது மட்டுமல்லாது, சுமார் இரு தசாப்த காலங்களாக தலைமை தாங்கிய ஒரு கூட்டையும் சிதைத்துள்ளதாகவும் இதற்கு யார் பொறுப்பு என்றும் நிலாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று வரையிலும் உத்தியோகபூர்வமாக எதையுமே கூறாத, அல்லது கூற முடியாத ஒரு தலைவராகக் சம்பந்தன் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தன் தலைமை தாங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை என்றும் அவருடைய கண்களுக்கு முன்னால் அவருடைய தாய்க் கட்சியாகிய தமிழரசு கட்சியும் சிதையக் கூடிய ஆபத்துக்கள் தெரிவதாக நிலாந்தன் எதிர்வுகூறியுள்ளார்.

சுமந்திரனின் ஆதரவாளர்கள் தனியாக ஒரு சுயேட்சைக் குழுவை உருவாக்கியுள்ளதாகவும் சில ஆதரவாளர்கள் சந்தரகுமாரின் சமத்துவக் கட்சியோடு இணைந்து விட்டதாகவும் நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக்கட்சியும் பிளவடையும் - கூட்டை பிரித்த சம்பந்தன் - நிலாந்தன் சுட்டிக்காட்டு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் பரிமான வளர்ச்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு என அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.எனவே, இதனை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அதன் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ் மக்களின் வரலாறு அவருக்குத் தந்த ஒரு முக்கியமான பொறுப்பை, அதாவது ஒரு பண்புருமாற்றத்துக்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.அதன் விளைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 13 ஆண்டுகளாக உடைந்துடைந்து வந்து தற்பொழுது தமிழரசு கட்சி தனியே பிரிந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்கு தலைமை தாங்க முடியாத சம்பந்தன், கூட்டமைப்பைச் சிதைத்தது மட்டுமல்லாது, சுமார் இரு தசாப்த காலங்களாக தலைமை தாங்கிய ஒரு கூட்டையும் சிதைத்துள்ளதாகவும் இதற்கு யார் பொறுப்பு என்றும் நிலாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று வரையிலும் உத்தியோகபூர்வமாக எதையுமே கூறாத, அல்லது கூற முடியாத ஒரு தலைவராகக் சம்பந்தன் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சம்பந்தன் தலைமை தாங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை என்றும் அவருடைய கண்களுக்கு முன்னால் அவருடைய தாய்க் கட்சியாகிய தமிழரசு கட்சியும் சிதையக் கூடிய ஆபத்துக்கள் தெரிவதாக நிலாந்தன் எதிர்வுகூறியுள்ளார்.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தனியாக ஒரு சுயேட்சைக் குழுவை உருவாக்கியுள்ளதாகவும் சில ஆதரவாளர்கள் சந்தரகுமாரின் சமத்துவக் கட்சியோடு இணைந்து விட்டதாகவும் நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement