• May 08 2024

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கொலை மிரட்டல்! பொலிஸார் அதிர்ச்சி தகவல்

Chithra / Jan 30th 2023, 1:49 pm
image

Advertisement

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவருகின்றன.

குறித்த தொலைபேசி அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை, தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.

தேர்தல் ஆணைய உறுப்பினர் எம்.எம். முகமதுவுக்கு கடந்த ஜனவரி 27ஆம் திகதி, தேர்தல் ஆணையத்தில் இருந்து விலகக் கோரி தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதேவேளை, இந்த மாத தொடக்கத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்களைப் பெற்ற ஆணைக்குழு உறுப்பினர் எஸ்.பி.திவரத்னவுக்கு, மேற்படி தினத்தில் மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஜனவரி 18ஆம் திகதி கே.பி.பி.பத்திரனவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குத் தெரியப்படுத்திய பின்னர் அவர்களுக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.


தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கொலை மிரட்டல் பொலிஸார் அதிர்ச்சி தகவல் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவருகின்றன.குறித்த தொலைபேசி அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.மேலும், குறித்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதுவரை, தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.தேர்தல் ஆணைய உறுப்பினர் எம்.எம். முகமதுவுக்கு கடந்த ஜனவரி 27ஆம் திகதி, தேர்தல் ஆணையத்தில் இருந்து விலகக் கோரி தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.இதேவேளை, இந்த மாத தொடக்கத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்களைப் பெற்ற ஆணைக்குழு உறுப்பினர் எஸ்.பி.திவரத்னவுக்கு, மேற்படி தினத்தில் மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், ஜனவரி 18ஆம் திகதி கே.பி.பி.பத்திரனவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குத் தெரியப்படுத்திய பின்னர் அவர்களுக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement