• Sep 29 2024

யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை..!உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு..!samugammedia

Sharmi / Aug 1st 2023, 11:52 am
image

Advertisement

யாழில் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் உரும்பிராயை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியை கடந்த சில நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் திடீரென உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

இந்நிலையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை.உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு.samugammedia யாழில் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் உரும்பிராயை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியை கடந்த சில நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார்.இந்நிலையில் திடீரென உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.இந்நிலையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement